×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

'ஆயிரம் இருந்தாலும் அவ பொண்டாட்டி.. நீ...' மனைவியை திட்டியதால் கொடூர கொலை.! திடுக் சம்பவம்.!

Thiruverkadu News: மனைவி குறித்து அவதூறாக பேசிய கள்ளக்காதலியை 35 வயது கூலித்தொழிலாளி சுரேஷ் அடித்துக்கொலை செய்த சம்பவம் திருவேற்காடு பகுதியில் நடந்துள்ளது.

Advertisement

கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

மீட்கப்பட்ட சடலம்:

Chennai News Today: சென்னையில் உள்ள திருவேற்காடு, அயனம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன் பெண் ஒருவர் உடலில் காயத்துடன் சடலமாக இருந்தார். இதனால் திருவேற்காடு காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: கோவையில் பயங்கரம்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலத்துடன் செல்பி எடுத்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவர்.!

கள்ளக்காதல் ஜோடி:

அந்த விசாரணையில், சடலமாக இருந்தவர் கோயம்பேடு பகுதியில் வசித்து வந்த ராதா (வயது 50) என்பது தெரியவந்தது. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ் (வயது 35) என்பவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு, பின் கள்ளக்காதல் உல்லாச ஜோடிகளாக வலம்வந்ததும் தெரியவந்தது.

மனைவி குறித்து அவதூறு:

இதனிடையே, 2 நாட்களுக்கு முன்பு கள்ளக்காதல் ஜோடி ஏரிக்கரையில் மதுபானம் அருந்தி இருக்கிறது. போதை தலைக்கேறிய நிலையில், சுரேஷின் மனைவி குறித்து ராதா விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகியுள்ளது.

பரிதாப பலி:

வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த சுரேஷ், ராதாவின் தலையை ஏரிக்கரை சுற்றுச்சுவரில் மோதவைத்து தாக்கி இருக்கிறார். மேலும், கையில் இருந்த பீர் பாட்டிலால் மண்டையை உடைத்துள்ளார். இதனால் படுகாயமடைந்த ராதா சம்பவ இடத்திலேயே ரத்தம் வெளியேறி பரிதாபமாக உயிரிழந்தார்.

கொலை சம்பவம் நடந்ததும் பயத்தில் சுரேஷ் தப்பியோடிவிடவே, அவரை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
 

இதையும் படிங்க: 'என் நம்பரை பிளாக் பண்றியா' காதலனை வீடுபுகுந்து கதைமுடித்த காதலி.. பகீர் சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#chennai #Crime news #Murder #illegal affair #சென்னை #கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story