×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அரசு ஊழியர்களுக்கு தவெக அரசு வைத்த செக்..! 5 வருஷம் முடுஞ்சுடுச்சா? அலறும் ஊழியர்கள்... அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் போட்ட அதிரடி கண்டிஷன்..!!!

ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு ஊழியர்களின் விவரங்களை சேகரித்து, பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செப்.23க்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.

Advertisement

ஒரே இடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் அரசு ஊழியர்களை கணக்கெடுத்து, பணியிட மாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக அனைத்துத் துறைச் செயலர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. செப்டம்பர் 23-ம் தேதிக்குள் முழுமையான விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோர் விவரம் சேகரிப்பு

நிர்வாக அலுவலர், இளநிலை நிர்வாக அலுவலர், அலுவலகக் கண்காணிப்பாளர், உதவியாளர் உள்ளிட்ட பணிகளில் இருப்பவர்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாகவோ அல்லது 10 ஆண்டுகளுக்கு மேலாகவோ பணியாற்றுகிறார்களா என்பதை துறை வாரியாக கணக்கெடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மூத்த மகளுக்கு திருமணமே ஆகிட்டு! ஆனால்.. அம்மா 6 வருஷ கள்ளக்காதல்... 3 மாதங்களுக்கு முன் பிரிவு! மருத்துவமனையில் பேச மறுத்ததால் வாசலில் நடந்த அதிர்ச்சி...! பகீர் சம்பவம்...!!!

மேலும், பதவி உயர்வு காரணமாக வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, பின்னர் மீண்டும் பழைய பணியிடத்துக்கே திரும்பிய ஊழியர்களின் விவரங்களையும் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எப்போது மீண்டும் பணியில் சேர்ந்தனர், அதற்கான காரணம் என்ன என்பதையும் தெளிவாக குறிப்பிட வேண்டும். இந்தப் பணியை பணியிட மாற்றம் தொடர்பான முக்கிய நடவடிக்கையாகக் கருதி அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பதவி உயர்வுக்குப் பிறகு மீண்டும் பழைய இடத்துக்கு வருவதா?

அரசு விதிகளின்படி, பதவி உயர்வு கிடைக்கும்போது பணியாளர்கள் வேறு பணியிடங்களுக்கு மாற்றப்படுவது வழக்கம். ஆனால் சில நேரங்களில் பதவி உயர்வு பெற்ற பிறகு புதிய இடத்துக்குச் சென்று, நிர்வாகக் காரணங்கள் அல்லது தற்காலிகப் பணிமாற்றம் போன்ற காரணங்களை முன்வைத்து மீண்டும் பழைய பணியிடத்துக்கே திரும்புவதாக கூறப்படுகிறது.

இதுபோன்று பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் தொடர்ந்து பணியாற்றும் ஊழியர்களின் விவரங்களையும் தற்போதைய கணக்கெடுப்பில் அரசு கவனத்தில் கொண்டுள்ளது. குறிப்பாக கணக்கு மற்றும் நிர்வாகப் பிரிவுகளில் நீண்ட காலம் ஒரே இடத்தில் பணியாற்றுவது தொடர்பாக பல்வேறு நிர்வாக சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசு கருதுகிறது.

நிர்வாக வெளிப்படைத்தன்மைக்காக நடவடிக்கை

ஒரே அலுவலகத்தில் நீண்ட காலம் பணியாற்றும்போது அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுடன் நெருக்கமான தொடர்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம். இதனால் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை பாதிக்கப்படுவதற்கும், முறைகேடுகள் தொடர்பான புகார்கள் உருவாகுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக அரசு கருதுகிறது.

இதையடுத்து, 5 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுவோரின் பட்டியலைத் தயாரித்து, விதிகளுக்கு உட்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 23-ம் தேதிக்குள் துறை வாரியாக விவரங்கள் பெறப்பட்ட பிறகு, அரசு ஊழியர்கள் இடமாற்றம் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: ஒன்றைரை வயது குழந்தையின் அழுகையின் பின்னால் 11 குழந்தைகள் மீட்பு! ஆட்டோவில் அழுத குழந்தையை... கண்டுக்காமல் இருந்த பெண்ணால் டிரைவருக்கு வந்த சந்தேகம்! கடைசியில் நடந்த பெரிய டுவிஸ்ட்..! பகீர் பின்னணி...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தமிழக அரசு ஊழியர்கள் #Employee Transfer #பணியிட மாற்றம் #5 ஆண்டுகள் #government employees
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story