×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மூத்த மகளுக்கு திருமணமே ஆகிட்டு! ஆனால்.. அம்மா 6 வருஷ கள்ளக்காதல்... 3 மாதங்களுக்கு முன் பிரிவு! மருத்துவமனையில் பேச மறுத்ததால் வாசலில் நடந்த அதிர்ச்சி...! பகீர் சம்பவம்...!!!

சென்னை வண்ணாரப்பேட்டையில் கள்ளக்காதலை கைவிட்ட பெண்ணுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டார். படுகாயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

Advertisement

சென்னை வண்ணாரப்பேட்டையில் கள்ளக்காதலை கைவிட்ட பெண்ணை பழிவாங்கும் நோக்கில், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பலத்த தீக்காயமடைந்த மோகனா (34), அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய பாபுலாலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

6 ஆண்டுகால பழக்கம்; 3 மாதங்களுக்கு முன்பு பிரிவு

வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாணிக்கத்தின் மனைவி மோகனா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்ட நிலையில், மோகனா தனது கணவர் மற்றும் இரண்டாவது மகளுடன் வசித்து வந்தார்.

இதையும் படிங்க: ஒன்றைரை வயது குழந்தையின் அழுகையின் பின்னால் 11 குழந்தைகள் மீட்பு! ஆட்டோவில் அழுத குழந்தையை... கண்டுக்காமல் இருந்த பெண்ணால் டிரைவருக்கு வந்த சந்தேகம்! கடைசியில் நடந்த பெரிய டுவிஸ்ட்..! பகீர் பின்னணி...!!!

இதற்கிடையே, திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்த பெயிண்டிங் தொழிலாளி பாபுலாலுடன் மோகனாவுக்கு கடந்த 6 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சுமார் 3 மாதங்களுக்கு முன்பு அந்த தொடர்பை மோகனா துண்டித்துள்ளார். அதன்பிறகு வேறு ஒருவருடன் அவர் பழகத் தொடங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருத்துவமனை அருகே ஏற்பட்ட தகராறு

வயிற்று வலி காரணமாக மோகனாவின் கணவர் மாணிக்கம் கடந்த செப்டம்பர் 17-ம் தேதி அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பார்க்க மோகனா மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது பாபுலால் அவரிடம் பேச முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், மோகனா பேச மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த பாபுலால், மதுபோதையில் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று ஒரு லிட்டர் கேனில் பெட்ரோல் வாங்கியுள்ளார். பின்னர் மோகனா வீட்டின் முன்பு அமர்ந்திருந்தபோது, அவரது பின்புறமாக சென்று திடீரென பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய பாபுலால் கைது

மோகனாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து அவரை மீட்டனர். பின்னர் படுகாயமடைந்த அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பாபுலாலை தேடி வந்தனர். நந்தியம்பாக்கத்தில் பதுங்கியிருந்த அவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், பாபுலால் மீது ஏற்கனவே எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் கொலை வழக்கும், ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெட்ரோல் தாக்குதல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: பாட்டி வீட்டிற்கு செல்ல மறுத்த 12 வயது சிறுவன்! காரணத்தை கேட்ட தாய்க்கு பேரதிர்ச்சி! 2 ஆண்டாக நடந்த கொடூரம்... வெளிவந்த பகீர் உண்மை...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#வண்ணாரப்பேட்டை #Petrol Attack #சென்னை குற்றச்செயல் #பாபுலால் கைது #Stanley hospital
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story