ஒன்றைரை வயது குழந்தையின் அழுகையின் பின்னால் 11 குழந்தைகள் மீட்பு! ஆட்டோவில் அழுத குழந்தையை... கண்டுக்காமல் இருந்த பெண்ணால் டிரைவருக்கு வந்த சந்தேகம்! கடைசியில் நடந்த பெரிய டுவிஸ்ட்..! பகீர் பின்னணி...!!!
சென்னையில் ஆட்டோவில் அழைத்துச் செல்லப்பட்ட 1.5 வயது குழந்தையை சந்தேகித்து போலீசாரிடம் தகவல் அளித்த டிரைவர் ஜோசப்பால் 11 குழந்தைகள் மீட்கப்பட்டனர்.
சென்னையில் மருத்துவமனை அருகே ஆட்டோவில் ஏற்றப்பட்ட 1.5 வயது குழந்தை தொடர்ந்து கதறிய நிலையில், அதை அழைத்துச் சென்ற பெண்ணின் நடவடிக்கையில் ஆட்டோ ஓட்டுநருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே சுதாரித்த அவர், மருத்துவமனை பாதுகாப்பு போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். தொடர்ந்து நடந்த விசாரணையில் குழந்தை கடத்தப்பட்டது தெரியவந்ததுடன், தமிழகம் முழுவதும் செயல்பட்டதாகக் கூறப்படும் குழந்தைகள் கடத்தல் கும்பலும் சிக்கியது.
குழந்தையின் அழுகையால் ஏற்பட்ட சந்தேகம்
சென்னையைச் சேர்ந்த டி. ஜோசப் ஆட்டோ ஓட்டி வருகிறார். மருத்துவமனை ஒன்றின் அருகே பெண் ஒருவர் தனது கையில் இருந்த 1.5 வயது குழந்தையுடன் ஆட்டோவில் ஏறியுள்ளார். பயணம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே குழந்தை தொடர்ந்து அலறி அழுதுள்ளது.
இதையும் படிங்க: பாட்டி வீட்டிற்கு செல்ல மறுத்த 12 வயது சிறுவன்! காரணத்தை கேட்ட தாய்க்கு பேரதிர்ச்சி! 2 ஆண்டாக நடந்த கொடூரம்... வெளிவந்த பகீர் உண்மை...!!!
குழந்தை இவ்வளவு பதற்றத்துடன் அழுதபோதும், தாயாக வந்த பெண் எந்தக் கவலையும் இல்லாமல் அமைதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதை கவனித்த ஜோசப்புக்கு சந்தேகம் வலுத்தது. வழியில் எதையும் செய்யாமல், ஆட்டோவை மீண்டும் மருத்துவமனை வளாகத்துக்கு திருப்பியுள்ளார்.
போலீசாரிடம் உடனடியாக தகவல்
மருத்துவமனை அருகே இருந்த பாதுகாப்பு போலீசாரிடம் நடந்ததை ஜோசப் நிதானமாக தெரிவித்தார். அதே நேரத்தில், தனது குழந்தையை காணவில்லை என உண்மையான தாய் மருத்துவமனையில் கதறி அழுது கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அந்தப் பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குழந்தை கடத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய அடுத்தகட்ட விசாரணையில், சட்டவிரோதமாக குழந்தைகளை தத்தெடுப்பது மற்றும் கடத்துவது தொடர்பான குழந்தைகள் கடத்தல் கும்பல் பற்றிய தகவல்கள் வெளியாகின.
மொத்தம் 11 குழந்தைகள் மீட்பு
விசாரணை விரிவடைந்த நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் குழந்தைகள் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், அந்த 1.5 வயது குழந்தை உட்பட மொத்தம் 11 குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
குழந்தையின் அழுகையை கவனித்து சந்தேகத்துடன் செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ஜோசப்பின் துரிதமான நடவடிக்கை, பெரிய அளவிலான விசாரணைக்கு முக்கிய தொடக்கமாக அமைந்துள்ளது. அவரது பொறுப்புணர்வும் சமயோசித செயல்பாடும் பலரது பாராட்டை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இன்ப செய்தி... மக்களின் பாரத்தை குறைக்கும் தவெக அரசு! இனி ரேஷன் கடைகளில் 20% வரை குறைந்த விலையில் மளிகைப் பொருட்களும் கிடைக்கும்...!!!