×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்ப செய்தி... மக்களின் பாரத்தை குறைக்கும் தவெக அரசு! இனி ரேஷன் கடைகளில் 20% வரை குறைந்த விலையில் மளிகைப் பொருட்களும் கிடைக்கும்...!!!

விலைவாசி உயர்வால் சிரமப்படும் மக்களுக்கு நியாயவிலைக்கடைகள் மூலம் பருப்பு, மசாலா, சோப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்களை 20% குறைந்த விலையில் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement

விலைவாசி உயர்வால் குடும்பங்களின் மாதாந்திர செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதன்படி, நியாயவிலைக்கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை மையங்கள் வழியாக அத்தியாவசிய மளிகைப் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

20% வரை குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள்

முதற்கட்டமாக பருப்பு வகைகள், மசாலா பொருட்கள், சோப்பு உள்ளிட்ட அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வெளிச்சந்தை விலையை ஒப்பிடும்போது, இப்பொருட்கள் சுமார் 20 சதவீதம் வரை குறைவான விலையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: போடு வெடிய... அனைவருக்கும் தீபாவளி பரிசு! சற்றுமுன் தமிழக அரசு அறிவித்த ஹாப்பி நியூஷ்!!!

மாதாந்திர குடும்ப செலவை குறைக்க திட்டம்

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் எளிய மற்றும் நடுத்தர குடும்பங்கள் கூடுதல் நிதிச் சுமையை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், நியாயவிலைக்கடைகள் மூலம் மளிகைப் பொருட்களையும் விற்பனை செய்வது குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் ஓரளவு நிவாரணத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்?

திட்டத்தின் செயல்படுத்தும் முறை, விற்பனை செய்யப்படும் பொருட்களின் பட்டியல் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, குறைந்த விலை மளிகைப் பொருட்கள் விற்பனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டம் நடைமுறைக்கு வந்தால், அத்தியாவசிய பொருட்களை வாங்கும் குடும்பங்களுக்கு நேரடியாக பயன் கிடைக்கும்.

 

இதையும் படிங்க: மக்களே... உருவானது புயல் சின்னம்...! தமிழகத்தில் 15 மாவட்டங்களில் வெளுத்து வாங்கபோகும் கனமழை! IMD விடுத்த அவசர எச்சரிக்கை....!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#விலைவாசி உயர்வு #நியாயவிலைக்கடை #Grocery Items #கூட்டுறவு விற்பனை #மளிகைப் பொருட்கள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story