×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உல்லாசம் வேண்டுமா வாங்க.. பைனான்சியருக்கு கும்மாங்குத்து.. ஆசையாக பேசி கதறவைத்த பெண்.. ட்விஸ்ட் வைத்த போலீஸ்.!

Sivagangai News: தனிமையில் இருக்க அழைத்து பைனான்சியரை மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

பைனான்சியரிடம் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதாக பெண் கைது செய்யப்பட்டார்.

பணம் கேட்டார்:

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், தம்பிபட்டி பகுதியில் வசித்து வருபவர் வடிவேல் (வயது 40). இவர் பைனான்சியர் ஆவார். கடந்த மாதம் வடிவேலுக்கு தொடர்பு கொண்ட மகேஸ்வரி என்ற பெண் அன்பாக பேசி இருக்கிறார். பின் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்த நிலையில், மகேஸ்வரி அவசரமாக பணம் வேண்டும் என ஜூன் 09ம் தேதி ரூ.4500 பெற்று இருக்கிறார். 

இதையும் படிங்க: கடன் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பாஜக பிரமுகரின் கொடூர செயல்..!

உல்லாச அழைப்பு:

பின் ஜூன் 24ம் தேதி வடிவேலை தொடர்புகொண்ட பெண்மணி, காரைக்குடி வந்தால் தனிமையில் இருக்கலாம் என கூறியுள்ளார். வடிவேலும் உல்லாசத்துக்கு ஆசையாக செல்ல, பெண் வீட்டுக்குள் அவரை அழைத்துச் சென்றதும் மர்ம கும்பல் வடிவேலை சரமாரியாக தாக்கி நிர்வாணப்படுத்தி இருக்கிறது. மேலும், ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளது. 

காவல்துறை அதிரடி:

பணம் தருவதாக கூறி வடிவேல் சென்ற நிலையில், எங்கு சென்றும் பணம் கிடைக்காத காரணத்தால் இறுதியில் சாலையில் விட்டுச் சென்றுள்ளது. பின் இதுதொடர்பாக வடிவேல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, காரைக்குடி காவல் துறையினர் திருச்சி காட்டூரைச் சேர்ந்த பியூட்டி பார்லர் நடத்தி வந்த மகேஸ்வரி என்ற பெண்ணை கைது செய்தனர். இவருக்கு உடந்தையாக இருந்த தமிழ்செல்வன் என்பவரும் கைது செய்யப்பட்டார். 

இதையும் படிங்க: ரூ.2,500 பணத்துக்காக பெண் கொலை.. 50 அடி பள்ளத்தில் உடல் வீச்சு.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Honey Trap #Crime news #beauty parlour #prostitution
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story