×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரூ.2,500 பணத்துக்காக பெண் கொலை.. 50 அடி பள்ளத்தில் உடல் வீச்சு.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு சம்பவம்.!

Kallakurichi News: பெண் ஊழியர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

தனியார் மருத்துவமனை பெண் ஊழியர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம் வெளியாகியுள்ளது.

தூய்மை பணியாளர்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், பொய்க்குணம் சாலையில் அலமேலு (வயது 59) என்பவர் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் தனியார் மருத்துவமனையில் தூய்மைப்பணியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அலமேலு பின் வீட்டுக்கு திரும்பவில்லை. இதுதொடர்பாக அலமேலுவின் கணவர் பாஸ்கர் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இதையும் படிங்க: மனைவி வெளியே போன கேப்பில் கள்ளக்காதலியுடன் ஜல்சா.. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்துக்கொலை.!

மர வியாபாரம்:

இதனிடையே, சங்கராபுரம் பகுதியில் வசித்து வந்த ராஜப்பன் (வயது 40) அலமேலுவை நான் கொலை செய்தேன் என சங்கராபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவரிடம் நடந்த விசாரணையில் பல பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ராஜப்பன் மர வியாபாரம் செய்து வந்துள்ளார். இவரின் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக அலமேலு வாடகைக்கு குடியிருந்து இருக்கிறார். அப்போது, ராஜப்பன் அலமேலுவிடம் ரூ.2,500 கடனாக பெற்றுள்ளார். 

திட்டியதால் ஆத்திரம்:

இந்த கடனை நீண்ட ஆண்டுகளாக திரும்ப தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அலமேலு பணத்தை தரவேண்டி ராஜப்பானை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அவ்வப்போது அவதூறு வார்த்தைகளால் திட்டியும் இருக்கிறார். சம்பவத்தன்று நண்பரிடம் பணம் வாங்கித் தருவதாக ராஜப்பன் அலமேலுவை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு நண்பரின் வீடு பூட்டி இருந்துள்ளது. இதனால் மீண்டும் அலமேலு ராஜப்பனை திட்டி இருக்கிறார்.

3 பேர் கைது:

இந்த சம்பவத்தில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ராஜப்பன் கல்லை எடுத்து அலமேலுவை தாக்கி இருக்கிறார். இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே பலியான நிலையில், உடலை யாருக்கும் தெரியாமல் சாக்கு மூட்டையில் கட்டி கல்வராயன் மலையில் உள்ள 50 அடி பள்ளத்தில் வீசிவிட்டுச் தப்பிச் சென்றுள்ளார். இந்த உண்மையை அறிந்த காவல்துறையினர், அலமேலுவின் உடலை மீட்டனர். மேலும், ராஜப்பனை கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய சுகன்யா (வயது 29), பாண்டுரங்கன் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கள்ளக்காதலுக்குள் கள்ளக்காதல்.. தலையில் கல்லைப்போட்டு பெண் கொடூர கொலை.. புதரில் நடந்த பயங்கரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Kallakurichi #Murder #50 அடி பள்ளம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story