×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கள்ளக்காதலுக்குள் கள்ளக்காதல்.. தலையில் கல்லைப்போட்டு பெண் கொடூர கொலை.. புதரில் நடந்த பயங்கரம்.!

Palani News: தகாத உறவை கைவிடமறுத்த பெண் கொலை செய்யப்பட்டார்.

Advertisement

தலையில் கல்லைப்போட்டு பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

புதரில் சடலம்:

Dindigul News Today: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, சிவகிரிபட்டி, பாண்டியன் நகரில் வசித்து வருபவர் காளீஸ்வரி (வயது 34). இவர் நேற்று அதிகாலை நேரத்தில், முட்புதரில் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டவாறு சடலமாக இருந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த பழனி காவல்துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: கள்ளக்காதல் உல்லாசம்.. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி.. வெறிச்செயலை அரங்கேற்றிய கணவன்.!

திருமணம்:

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், காளீஸ்வரியின் கள்ளக்காதலன் மகுடேஸ்வரன் (வயது 40) கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையில் பல பரபரப்பு தகவல் வெளியாகியது. காளீஸ்வரி ஒட்டன்சத்திரம், கள்ளிமந்தயம் பகுதியில் வசித்து வருபவர் கருப்பசாமி. இவருக்கும் - கருப்பசாமிக்கும் சில ஆண்டுகளுக்கும் முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

உல்லாசம்:

இவர் பக்கவாத நோய் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், காளீஸ்வரி பிரிந்து இருக்கிறார். இதற்குப்பின் காளீஸ்வரிக்கு மகுடேஸ்வரனுடன் பழக்கம் ஏற்படவே, இருவரும் ஒருகட்டத்தில் தனியாக பாண்டியன் நகரில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர். இந்த வீட்டுக்கு குரு என்பவர் சென்று அடிக்கடி காளீஸ்வரியுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த விஷயம் வீட்டின் உரிமையாளருக்கு தெரியவரவே, அவர் காளீஸ்வரியை கண்டித்து இருக்கிறார். 

கைது:

இதனிடையே, மகுடேஸ்வரனை வீட்டுக்குள் அனுமதிக்காமல் பெண்மணி வெளியே சந்தித்து வந்துள்ளார். பின் இரவில் இருவரும் புதர் பகுதிக்குச் சென்று மதுபானம் அருந்திவிட்டு உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, குருவுடன் கொண்ட தொடர்பை கைவிடுமாறு பேச்சுவார்த்தை எழவே, வாக்குவாதம் உண்டாகி இருக்கிறது. அப்போது, ஆத்திரத்தில் மகுடேஸ்வரன் காளீஸ்வரியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து இருக்கிறார். இறுதியில் மகுடேஸ்வரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: சோறு சமைக்கலையா? 56 வயது கள்ளக்காதலியை குத்திக்கொன்ற 28 வயது இளைஞர்.. திடுக் சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Dindigul #குற்றம் #திண்டுக்கல் #கள்ளக்காதல் கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story