தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப் போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்கப் போகும் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 16) 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய வடக்கு மற்றும் வட உள் மாவட்டங்களிலும், நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களிலும் சில இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும்.
மழை பெய்யும் நேரங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையும், பலத்த தரைக்காற்றும் வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டும். மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், மலைப்பாதைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்க வேண்டியுள்ளது. மழையின் போது சாலைகளில் வழுக்கும் தன்மை ஏற்படுவதுடன், சில இடங்களில் பார்வைத்திறனும் குறையக்கூடும் என்பதால் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
இதனிடையே, தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களிலும் மழைக்கான வாய்ப்பு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய அறிவிப்புகளை தொடர்ந்து கவனித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் படிங்க: தமிழகத்தில் தொடரும் மழை... இன்று எந்தெந்த மாவட்டங்களில் வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!