தமிழகத்தில் தொடரும் மழை... இன்று எந்தெந்த மாவட்டங்களில் வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் தொடரும் மழை... இன்று எந்தெந்த மாவட்டங்களில் வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று (செப்.13) பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மழையின்போது சில இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு! 21 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை.!
தொடர்ந்து வரும் நாட்களிலும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செப்.15 மற்றும் 16-ம் தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: 7 மணிக்கு மேல் வெளுத்து வாங்கப் போகும் மழை? வானிலை நிலவரம் இதோ!