×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு! 21 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை.!

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு! 21 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை.!

Advertisement

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இன்று 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: 7 மணிக்கு மேல் வெளுத்து வாங்கப் போகும் மழை? வானிலை நிலவரம் இதோ!

இதனால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் மழைநீர் தேங்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எச்சரிக்கையுடன் இருக்கவும், வாகன ஓட்டிகள் மழையின்போது கவனமாக பயணிக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதையும் படிங்க: வெயிலுக்கு நடுவே வந்த மழை அப்டேட்! 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rain update #weather update #rain #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story