தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (செப்டம்பர் 15) தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மாவட்டங்களில் சில பகுதிகளில் மழையுடன் இடி, மின்னலும் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மலைப்பகுதிகள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் வானிலை மாற்றங்களை பொதுமக்கள் தொடர்ந்து கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மேகங்கள் திரளும்… மழையும் பெய்யும்! 9 மாவட்டங்களுக்கு இன்று மழை எச்சரிக்கை!
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில், நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை இன்று அதிகபட்ச வெப்பநிலை சுமார் 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை பெய்யும் நேரங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குவதால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலைகளில் கூடுதல் கவனத்துடன் பயணிக்கவும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு! 21 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை.!