×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மேகங்கள் திரளும்… மழையும் பெய்யும்! 9 மாவட்டங்களுக்கு இன்று மழை எச்சரிக்கை!

மேகங்கள் திரளும்… மழையும் பெய்யும்! 9 மாவட்டங்களுக்கு இன்று மழை எச்சரிக்கை!

Advertisement

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றைய (செப். 11) சென்னை வானிலை முன்னறிவிப்பின்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 7 மணிக்கு மேல் வெளுத்து வாங்கப் போகும் மழை? வானிலை நிலவரம் இதோ!

மேலும், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இதுதவிர, தமிழகத்தின் ஏனைய பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வெயிலுக்கு நடுவே வந்த மழை அப்டேட்! 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#weather report #weather update #rain #tamilnadu #chennai weather
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story