×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

8 -ஆம் வகுப்பு மாணவிக்கு அத்துமீறிய பாலியல் வன்கொடுமை! மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி... கர்ப்பத்துக்கான காமக்கொடூரன் யார் தெரியமா? பகீர் சம்பவம்!!!

மருத்துவ பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை! சிறுமி கர்ப்பம் – போக்சோவில் கொத்தனார் கைது!

Advertisement

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உறவினர் வீட்டிற்கு வந்த 8-ம் வகுப்பு மாணவியிடம், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கொத்தனார் ஒருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கல்லுகுடி மாதா கோவில் தெருவைச் சேர்ந்த ராஜசேகர் (31) என்பவர், கடந்த மே 16-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மாணவி கர்ப்பமடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி மாணவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், மாணவி சுமார் 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ராஜசேகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 10 -ஆம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறிய அறிவியில் ஆசிரியர்..! டார்ச்சல் தாங்க முடியாமல் மாணவி எடுத்த விபரீத முடிவு.... கள்ளக்குறிச்சியில் நடந்த அதிர்ச்சி!!!

இதனையடுத்து நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், ராஜசேகரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: PET ஆசிரியர் செய்ற வேலையா இது? இன்ஸ்டா மூலம் டார்ச்சர்.. தாய் பரபரப்பு புகார்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#School girl pregnant #thiruvarur #Nagapattinam #harassment #sexual abuse
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story