×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

10 -ஆம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறிய அறிவியில் ஆசிரியர்..! டார்ச்சல் தாங்க முடியாமல் மாணவி எடுத்த விபரீத முடிவு.... கள்ளக்குறிச்சியில் நடந்த அதிர்ச்சி!!!

பள்ளி மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர்.. மாணவி எடுத்த விபரீத முடிவு.. போலீசார் அதிரடி நடவடிக்கை!

Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தெங்கியாநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் அறிவியல் ஆசிரியர் ஜெகதீசன் (46) பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த 7-ம் தேதி காலை மாணவி விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்த அவரிடம் பெற்றோர் விசாரித்தபோது, பள்ளியில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து மாணவியை பெற்றோர் சின்னசேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்துள்ளனர்.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் மாணவி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே, மாணவி அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இதையும் படிங்க: PET ஆசிரியர் செய்ற வேலையா இது? இன்ஸ்டா மூலம் டார்ச்சர்.. தாய் பரபரப்பு புகார்!

அதன்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷஹ்னாஸ் தலைமையிலான போலீசாரும், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், ஆசிரியர் ஜெகதீசனை கச்சிராயபாளையம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

மேலும், மாணவியின் புகார் மற்றும் ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி விஷம் குடித்த சம்பவத்துடன் ஆசிரியர் மீதான பாலியல் சீண்டல் புகார் தொடர்புடையதாக கூறப்படுவதால், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தாக்குதல் + பாலியல் தொல்லை.. மன உளைச்சலில் விவசாயி தற்கொலை! ராமநாதபுரத்தில் பரபரப்பு!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kallakurichi #ChinnaSelam #Thengiyanatham #harassment #suicide attempt
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story