PET ஆசிரியர் செய்ற வேலையா இது? இன்ஸ்டா மூலம் டார்ச்சர்.. தாய் பரபரப்பு புகார்!
PET ஆசிரியர் செய்ற வேலையா இது? இன்ஸ்டா மூலம் டார்ச்சர்.. தாய் பரபரப்பு புகார்!
சென்னை அரும்பாக்கத்தில் பள்ளி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், தனியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அரும்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த மூர்த்தி என்பவர், அதே பள்ளியில் படிக்கும் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது.
ஆசிரியர் தொடர்ந்து சமூக வலைதளத்தில் தொடர்பு கொண்டு வந்ததாகவும், இதனால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய் காவல்துறையில் புகார் அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: K.N.நேரு தொடர்புடைய இடங்களில் ‘ரெய்டு’.. 10 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை!
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சம்பந்தப்பட்ட PET ஆசிரியரை கைது செய்துள்ளனர். மேலும், ஆசிரியர் மற்றும் மாணவி இடையே இன்ஸ்டாகிராமில் நடைபெற்றதாகக் கூறப்படும் உரையாடல்கள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பள்ளி மாணவர்களுடன் ஆசிரியர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்வது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், இந்த சம்பவமும் பெற்றோர் மற்றும் கல்வித்துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வெளிநாட்டு பெண்ணிடம் நிர்வாண பூஜை.. ரூ.90,000 மோசடி செய்த ஜோதிடர் கைது.!