×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குறைந்த முதலீடு, அதிக வட்டி, டபுள் லாபம்.. தேனாய் பேசி திகட்ட திகட்ட கேடி வேலை செய்த தோழிகள்.. நெல்லையில் ஷாக்.! 

தங்களின் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என மக்களை ஏமாற்றிய தோழிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Advertisement

ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் அதிக வட்டிப்பணம் கிடைக்கும் என்று கூறி மக்களை ஏமாற்றிய தோழிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர். 

வெளிநாட்டு கம்பெனி வேலை? 

திருநெல்வேலி மாவட்டம், நெல்லை நகரம் கரையிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பூரணச்செல்வி (வயது 30). இவரின் தோழி சண்முகலட்சுமி (வயது 23). இருவரும் பட்டப்படிப்பு படித்துவிட்டு, கியூனெட் என்ற பன்னாட்டு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருவதாக தங்களிடம் அறிமுகமாகும் நபர்களிடம் தெரிவித்துள்ளனர். 

இதையும் படிங்க: நொடியில் பிரிந்த உயிர்.. ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த மகன் துள்ளத்துடிக்க பலி., தந்தை படுகாயம்.! 

லட்சங்களில் முதலீடு வருமானம்.. 

இவ்வாறாக தங்களை நெல்லை நகரில் பிரபலப்படுத்திக்கொண்டவர்கள், தங்களின் நிறுவனத்தில் உறுப்பினராகி ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம். மாதம் வட்டியாக பெரிய தொகை கிடைக்கும், ஒவ்வொரு நாளும் அதிகமாக லட்சக்கணக்கில் வருவாய் வட்டியாக மட்டும் கிடைக்கும் என கூறி இருக்கின்றனர். 

முதலீடு செய்த மக்கள்: 

இவர்களின் பேச்சை அம்பி திருநெல்வேலி நகரில் வசித்து வரும் வேம்பு என்பவரின் மனைவி தங்கமாரி (வயது 47) முதலீடு செய்ய ரூ.5 லட்சம் பணம் கொடுத்துள்ளார். பின் முதலீடு பணத்தை திரும்ப கேட்டபோது இளம்பெண்கள் பதில் சொல்லவில்லை. இதனால் சந்தேகமடைந்த தங்கமாரி நெல்லை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

விசாரணை: 

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பணமோசடி நடந்தது அம்பலமாகவே, இருவரையும் கைது செய்த அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவர்கள் பலரிடமும் இவ்வாறாக பணத்தை பெற்று மோசடி செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. பரிதாப மரணம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #nellai #Investment fraud #நெல்லை தோழி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story