×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. பரிதாப மரணம்.! 

Perambalur News: அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழந்தார். 

Advertisement

விவசாய நிலத்தில் அறுவடைப்பணிகள் நடந்து வந்த நிலையில், பெண் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 

சாகுபடி பணிகள்: 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிறுவாச்சூர், அய்யலூர் கிராமத்தில் வசித்து வருபவர் சிங்காரம். இவருக்கு சொந்தமாக ஆலத்தூர், காரை மேற்கு பகுதியில் சொந்தமாக வயல் இருக்கிறது. இந்த வயலை அய்யலூர் பகுதியில் வசித்து வரும் கலியபெருமாள் குத்தகை எடுத்து இருக்கிறார். தற்போது சூரியகாந்தி சாகுபடி பணிகள் நடந்து வருகின்றன. 

இதையும் படிங்க: இன்ஸ்டா காதலால் விபரீதம்.. தாய்-மகள் கொடூரமாக வெட்டிக்கொலை.. திருப்பூரில் வீடுபுகுந்து பயங்கரம்.!  

தொழிலாளி:  

இன்றும் வழக்கம்போல அறுவடைப்பணிகள் நடந்து வந்த நிலையில், அறுவடை இயந்திரமும் வரவழைக்கப்பட்டது. கூடுதல் பணிக்காக அய்யலூர் இளங்கோ நகரில் வசித்து வரும் வடிவேல் என்பவரின் மனைவி பானுமதி (வயது 50) ஈடுபட்டுள்ளார். இவர் சூரியகாந்தி பூக்களை அறுவடை இயந்திரத்தில் கொட்டி இருக்கிறார். 

சிக்கிய சேலை: 

அச்சமயம், எதிர்பாராத விதமாக அறுவடை இயந்திரத்தில் சேலை சிக்கிவிடவே, பானுமதியும் இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டார். இதில் அவர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

விசாரணை: 

இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் காவல் துறையினர், பானுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: காரித்துப்பிய நபர்.. ஆத்திரத்தில் வீசிய குண்டு.. கடலூரில் ஓட்டுநர் கொலை.. பதறவைக்கும் தகவல்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Perambalur #Agriculture
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story