நொடியில் பிரிந்த உயிர்.. ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த மகன் துள்ளத்துடிக்க பலி., தந்தை படுகாயம்.!
Dharmapuri News: ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய சிறுவன் உயிரிழந்தார்.
கோயிலுக்குச் செல்லும் நபர்களை வழியனுப்ப வந்த இடத்தில் சோகம் நடந்தது.
கோயிலுக்குச் சென்றனர்:
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பைசு அள்ளி பகுதியில் வசித்து வருபவர் முனியப்பன் (வயது 34). இவருக்கு சுகன்யா என்ற மனைவி, யாசிரியன் (வயது 7) என்ற மகன் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். நேற்று காலையில் சுகன்யா, அவரின் தாய் தேன்மொழி, அவரின் தம்பி, தங்கை ஆகியோர் கேரளா சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயிலுக்குச்செல்ல தர்மபுரி ரயில் நிலையம் வந்துள்ளனர்.
இதையும் படிங்க: அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. பரிதாப மரணம்.!
வழியனுப்ப..
இவர்களை வழியனுப்பி வைப்பதற்காக முனியப்பன் தனது மகன் யாசிரியனுடன் வந்துள்ளார். காலையில் சுமார் 9 மணியளவில் பெங்களூர் - எர்ணாகுளம் அதிவிரைவு ரயில் வந்ததும் பயணிகள் ஏறி இருக்கின்றனர். 2 நிமிடத்தில் ரயில் புறப்பட்ட நிலையில், ஓடும் ரயிலில் இருந்து மகனுடன் முனியப்பன் கீழே இறங்க முற்பட்டுள்ளார்.
விழுந்தனர்:
அப்போது, நடைமேடை - ரயில் இடையே தவறி விழுந்தனர். இந்த விபத்தில் ரயில் சக்கரத்தில் சிக்கிய சிறுவன், உடல் இரண்டு துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தார். முனியப்பன் கால் எலும்பு முறிவுடன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். இந்த விஷயம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளி வளாகத்தில் மாணவருக்கு நேர்ந்த சோகம்.. பரிதாப மரணம்.. பெற்றோர் கண்ணீர்.!