×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பள்ளி வளாகத்தில் மாணவருக்கு நேர்ந்த சோகம்.. பரிதாப மரணம்.. பெற்றோர் கண்ணீர்.! 

மின்சாரம் பாய்ந்து 6 ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

Advertisement

6 ம் வகுப்பு மாணவர் பள்ளி வளாகத்தில் வைத்து மின்சாரம் தாக்கி பலியானார். 

12 வயது மாணவர்: 

Class 6 Student Dies: ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி, ஏமம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவர் ஓட்டுநர் ஆவார். இவரின் மனைவி செல்வி. தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். 12 வயதுடைய மகன் யோகேஷ்.  

இதையும் படிங்க: இன்ஸ்டா காதலால் விபரீதம்.. தாய்-மகள் கொடூரமாக வெட்டிக்கொலை.. திருப்பூரில் வீடுபுகுந்து பயங்கரம்.!  

பள்ளி மாணவர்: 

இவர் குப்பிச்சிபாளையம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற யோகேஷ், மதிய உணவு இடைவேளையின்போது உணவு சாப்பிட்டு இருக்கிறார். 

தண்ணீர் இல்லை: 

பின் அங்கு கை-கழுவ தண்ணீர் இல்லாத காரணத்தால், அரசு ஆரம்பப்பள்ளிக்குச் சென்றுள்ளார். அச்சமயம், அங்கு அறுந்து கிடந்த மின்கம்பி தெரியாமல் அதில் கால் வைத்துள்ளார். இதனால் சிறுவனின் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட மாணவர் மயங்கி விழுந்து இருக்கிறார். 

மரணம்: 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் மாணவரை மீட்டு உடனடியாக மைலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, மாணவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. மாணவரின் மரணம் குறித்த தகவல் கிடைத்ததும் திரண்டு வந்த கிராம மக்களால் அச்சமடைந்த மருத்துவர்கள், ஆசிரியர்களை பாதுகாப்பாக அறை ஒன்றில் பூட்டி வைத்தனர். 

விசாரணை: 

பின் இதுகுறித்து பவானி காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, நேரில் வந்த அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்ல அறிவுறுத்தினர். மாணவரின் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

இதையும் படிங்க: காரித்துப்பிய நபர்.. ஆத்திரத்தில் வீசிய குண்டு.. கடலூரில் ஓட்டுநர் கொலை.. பதறவைக்கும் தகவல்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #accident #erode
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story