பழிக்குப்பழி.. முன்விரோத தகராறில் பிளம்பர் கொடூர கொலை.. நெல்லையில் ஷாக் சம்பவம்.!
Tirunelveli News: பிளம்பர் கொலை செய்யப்பட்டார்.
முன்விரோத தகராறில் நடந்த கொலை சம்பவம் நெல்லையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்களுடன் புறப்பாடு:
Nellai News: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாறையடி, மந்திரமூர்த்தி தெருவில் வசித்து வருபவை ஆவுடையப்பன் என்ற ஆனந்தராஜ் (வயது 38). இவர் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை நேரத்தில் நண்பர்களுடன் வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றவர், நெல்லை நகர சாலையில் கோயிலின் அருகேயுள்ள தொட்டியில் உட்கார்ந்து இருந்தார்.
இதையும் படிங்க: கரும்புக்காட்டுக்குள் கழுத்தறுக்கப்பட்ட பெண் சடலம்.. தேடி அலைந்த உறவினர்களுக்கு திடுக் துயரம்.!
கொலை:
அப்போது, 2 நண்பர்களுடன் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பி வருவதாக கூறி புறப்பட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு ஆவுடையப்பன் சடலமாக இருந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், ஆவுடையப்பனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதிகாரிகள் விசாரணை:
விசாரணையில், இதே பகுதியில் இருக்கும் கோட்டையடி பகுதியில் வசித்து வந்த பெயிண்டர் ரஞ்சன் (வயது 30) என்பவருக்கும், ஆவுடையப்பனுக்கும் தகராறு இருப்பது தெரியவந்தது. இந்த முன்விரோதத்தில் ரஞ்சன் தனியாக இருந்த ஆவுடையப்பனை கொலை செய்தது தெரியவந்ததைத்தொடர்ந்து, ரஞ்சனை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.
இதையும் படிங்க: வீட்டுக்குள் புகுந்து 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. சென்னையில் பேரதிர்ச்சி.!