×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டுக்குள் புகுந்து 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை.. வீடெல்லாம் ரத்த வெள்ளம்.. சென்னையில் பேரதிர்ச்சி.!

Chennai Crime News: இரண்டு இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் படப்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

6 பேர் கும்பல் செய்த பயங்கர சம்பவம் படப்பையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

கானா இசைக்குழு:

Kanchipuram News: காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம், படப்பை, அம்மனம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் லோகேஷ் (வயது 24). இவர் நண்பர்களுடன் துக்க வீடுகளில் தாரை, தப்பட்டை இசைக்கும் இசைக்கலைஞராக வேலை பார்த்து வருகிற. மேலும், ஊர் ஊராகச் சென்று கானா கச்சேரியும் நடத்தி வருகிறார்.

இதையும் படிங்க: காதல் கணவனை குடும்பத்துடன் சேர்ந்து போட்டுத்தள்ளிய மனைவி.. அதிர்ச்சிதரும் காரணம்.!

நண்பரின் வீடு:

தாம்பரம் வரதராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் பரத் குமார் (வயது 24), சீனிவாசன் (வயது 23). இவர்கள் இருவரும் லோகேஷின் நண்பர்கள் ஆவார்கள். இவர்களும் கானா கச்சேரி குழுவில் இருக்கின்றனர். இதற்காக அவ்வப்போது நண்பர் லோகேஷை பார்க்க நேரில் சென்று வருவது வழக்கம். ஒருசில நாட்கள் தங்கி செல்வதும் வாடிக்கை என கூறப்படுகிறது.

பயங்கர ஆயுதம்:

இவர்களுடன் லோகேஷின் தாய்-தந்தையும் இருக்கின்றனர். லோகேஷ் அப்பகுதியிலேயே தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் லோகேஷின் வீட்டுக்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், கத்தி உட்பட பயங்கர ஆயுதத்துடன் இருந்துள்ளது. இதனைக்கண்ட லோகேஷ் பதற்றத்தில் ஓட்டம் பிடித்து இருக்கிறார். அவரின் பெற்றோர் அபயக்குரல் எழுப்பி இருக்கின்றனர். 

ரத்த வெள்ளமான வீடு:

இதனால் அவர்களின் கழுத்தில் கத்தி வைத்த கும்பல், சத்தம் போட்டால் கொலை செய்திடுவோம் என மிரட்டி இருக்கின்றனர். பின் அந்த கும்பலைச் சேர்ந்த 4 பேர் பரத்குமார், சீனிவாசனை வீட்டுக்குள் வைத்தே சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர். இந்த சம்பவத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த படைப்பை காவல்துறையினர், இளைஞர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், "கஞ்சா போதையில் உறங்கிக்கொண்டு இருந்த இளைஞர்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அப்பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமிராவும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கஞ்சா விற்பனை தகராறில் கொலை நடந்ததா?" எனவும் விசாரணை நடந்து வருகிறது.
 

இதையும் படிங்க: கரும்புக்காட்டுக்குள் கழுத்தறுக்கப்பட்ட பெண் சடலம்.. தேடி அலைந்த உறவினர்களுக்கு திடுக் துயரம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #kanchipuram #Murder #வெட்டிக்கொலை #படப்பை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story