×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பணக்கார வேஷம் வெளிச்சத்துக்கு வந்தது! வருமானத்தை ஆராய்ந்த போலீஸ்.... வீட்டை பூட்டி தலைமறைவான யூடியூப் பிரபலம் மதுமிதா குடும்பம்! அடுத்தடுத்து அம்பலமாகும் பகீர் ரகசியங்கள்..!!!

நாகர்கோவில் அருகே யூடியூப் பிரபலம் வீட்டில் 118 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தம்பதியரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே யூடியூப், இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான தம்பதியின் வீட்டில் 118 சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொள்ளையர்களை கைது செய்த போலீசார், அடுத்தகட்டமாக வீட்டின் உரிமையாளர்களான மதுமிதா மற்றும் வினோத் குமாரின் பின்னணி குறித்தும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். போலீசாரின் விசாரணை வளையம் இறுகிய நிலையில், இருவரும் வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தள வீடியோக்களை வைத்து கொள்ளை திட்டம்

தம்மத்துகோணம் வி.ஐ.பி. நகரைச் சேர்ந்த வினோத் குமார், அவரது மனைவி மதுமிதா ஆகியோர் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் குறும்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வந்தனர். சில நாட்களுக்கு முன்பு மதுமிதாவின் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த சுமார் 118 சவரன் நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் சென்றனர். சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: எப்ப பாரு நகையை காட்டி வீடியோ போட்டாங்க...! பிரபல பெண் யூடியூபர் வீட்டில் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கொள்ளையர்கள்! பரபரப்பு வாக்குமூலம்...!!!

சிசிடிவி காட்சிகள், செல்போன் எண்களின் தடயங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மதுமிதா சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட வீடியோக்கள் மற்றும் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டே கொள்ளை திட்டமிடப்பட்டதாக தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பணம் மற்றும் நகை பதிவுகள் எழுப்பிய சந்தேகம்

கொள்ளைக்குப் பிறகும் மதுமிதா பணக்கட்டுகளுடன் நடனமாடும் வீடியோக்கள், புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. அவை சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதுடன், அவரது பதிவுகளுக்கு லட்சக்கணக்கான பார்வைகளும், புதிய ஃபாலோயர்களும் கிடைத்தன. இதையடுத்து, குறுகிய காலத்தில் இவ்வளவு மதிப்புள்ள நகைகள் மற்றும் சொத்துகள் எப்படி சேர்க்கப்பட்டன என்பது குறித்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மதுமிதா, வினோத் குமார் ஆகியோரின் வருமானம், தொழில் பின்னணி மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து போலீசார் விசாரணையை விரிவுபடுத்தினர். அவர்களது வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பான விவரங்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், முறைகேடான தொழில் அல்லது நிதி பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

திடீரென தலைமறைவு; செல்போன் டவர் மூலம் தேடுதல்

போலீசாரின் விசாரணை தங்களை நோக்கி திரும்பியதை உணர்ந்த மதுமிதா மற்றும் வினோத் குமார் வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவாகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சுசீந்திரம் தனிப்படை போலீசார் இருவரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இருவரது செல்போன் எண்களின் டவர் இருப்பிடத்தை வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும், அவர்களுக்கு யாரேனும் அடைக்கலம் கொடுத்துள்ளார்களா அல்லது வேறு நபர்களின் உதவியுடன் தப்பிச் சென்றார்களா என்பது குறித்தும் விசாரணை நடக்கிறது. தம்பதியினருக்குச் சொந்தமான சொகுசு பங்களா, சொத்துகள் மற்றும் அதுதொடர்பான ஆவணங்களையும் போலீசார் சேகரித்து வருகின்றனர். விசாரணை மற்றும் சோதனைகள் நிறைவடைந்த பிறகே நிதிப் பரிவர்த்தனைகள் தொடர்பான முழு விவரங்களும் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: இருக்குதுன்னு காட்டப்போய் இப்படி ஆச்சே? நகை, கார், பணத்துடன் யூடியூப்பில் போட்ட ரீல்ஸ்! அடுத்த நாள் வீட்டில் 118 சவரன் நகை அபேஸ்! அதிர்ச்சி சம்பவம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#நாகர்கோவில் கொள்ளை #YouTuber Jewellery Theft #118 சவரன் நகைகள் #சுசீந்திரம் போலீஸ் #மதுமிதா வினோத் குமார்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story