×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

4 வருஷம் கஷ்டப்பட்டு சிறுக சிறுக சேர்த்த பணத்தை.. எப்படி சேமிக்கணுன்னு தெரியாம போச்சு! பீரோவைத் திறந்ததும் எலக்ட்ரீசன்கு காத்திருந்த பேரதிர்ச்சி! CM விஜய்யிடம் உதவி கோரிக்கை..!!!

நாகப்பட்டினத்தில் எலக்ட்ரீசியன் ஒருவர் நான்கு ஆண்டுகளாகச் சேமித்த ரூ.4.88 லட்சம் பணத்தை கரையான்கள் அரித்துச் சேதப்படுத்தியதால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

Advertisement

நாகப்பட்டினத்தில் நான்கு ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டு உழைத்து, சிறுகச் சிறுகச் சேமித்த ரூ.4.88 லட்சம் பணத்தை கரையான்கள் அரித்துச் சேதப்படுத்தியதால் எலக்ட்ரீசியன் ஒருவர் அதிர்ச்சியடைந்துள்ளார். வங்கியில் பணத்தை மாற்ற முயன்றபோதும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட செல்வம் முருகன், தமிழக முதல்வர் விஜய் தனக்கு உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

பீரோவில் வைத்திருந்த ரூ.4.88 லட்சம் சேதம்

நாகப்பட்டினம் நீலா மேல வீதியைச் சேர்ந்த 30 வயதான செல்வம் முருகன், எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். ஒப்பந்த அடிப்படையில் வெளியூர்களுக்குச் சென்று வேலை பார்த்து வந்த அவர், கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமித்து வீட்டிலிருந்த மர பீரோவில் வைத்துள்ளார். இவ்வாறு ரூ.4.88 லட்சம் வரை சேர்த்திருந்த நிலையில், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காகப் பணத்தை எடுக்க பீரோவைத் திறந்துள்ளார்.

இதையும் படிங்க: என் மகள் உயிரோடதான் இருக்காள்..! முழு நம்பிகையுடன் கதறி அழுத காத்திருக்கும் தாய்... செஞ்சி சிறுமி வழக்கில் நெஞ்சை உருக்கும் தருணம்..!!!

அப்போது அவர் சேமித்து வைத்திருந்த ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகளை கரையான்கள் அரித்துச் சேதப்படுத்தியிருந்தது தெரியவந்தது. நோட்டுகள் கிழிந்து துண்டு துண்டாகச் சிதறிக் கிடந்ததைக் கண்டு செல்வம் முருகன் அதிர்ச்சியில் உறைந்தார். நான்கு ஆண்டுகளாக உழைத்துச் சம்பாதித்த பணம் இப்படி வீணாகிவிட்டதே என வேதனை அடைந்துள்ளார்.

ரிசர்வ் வங்கியை அணுகியும் தீர்வு கிடைக்கவில்லை

இதையடுத்து, அக்கம்பக்கத்தினரின் ஆலோசனையின்படி சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக அருகிலுள்ள வங்கிகளை அணுகியுள்ளார். ஆனால், சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியைத் தொடர்புகொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் சென்னைக்குச் சென்ற செல்வம் முருகனுக்கு அங்கும் ஏமாற்றமே ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கரையான்கள் அரித்ததால் ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்கள் அழிந்துவிட்ட நிலையில், அவற்றை மாற்றுவதில் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், முழுத் தொகையும் திரும்பக் கிடைக்கும் என உறுதி அளிக்க முடியாது என்றும் கூறியதாகத் தெரிகிறது.

முதல்வர் விஜயிடம் உதவி கோரிக்கை

பல ஆண்டுகளாகச் சேமித்த பணத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் செல்வம் முருகன் மனமுடைந்துள்ளார். தனது குடும்பத் தேவைகளுக்காகச் சேமித்த தொகையை மீட்டுத் தர தமிழக முதல்வர் விஜய் உதவ வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இதையும் படிங்க: ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை...! CM விஜய் எடுத்த அதிரடி முடிவு..! இல்லத்தரசிகளுக்கு வெளியான ஹாப்பி நியூஷ்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#நாகப்பட்டினம் #செல்வம் முருகன் #கரையான்கள் #ரூ.4.88 லட்சம் #Reserve Bank Of India
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story