ரூ.2,500 மகளிர் உரிமைத் தொகை...! CM விஜய் எடுத்த அதிரடி முடிவு..! இல்லத்தரசிகளுக்கு வெளியான ஹாப்பி நியூஷ்..!!!
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தும் திட்டத்திற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். தகுதியான அனைவரும் பயன்பெறும் வகையில் திட்டம் சீரமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் மகளிருக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உரிமைத் தொகையை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதியின்படி உயர்த்தப்பட்ட தொகையை வழங்க அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தகுதியான பெண்கள் அனைவருக்கும் இந்தத் திட்டத்தின் பயன் கிடைக்கும் வகையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.2,500 வழங்க அரசு நடவடிக்கை
ராஜபாளையத்தில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, மகளிர் உரிமைத் தொகையை உயர்த்தி வழங்குவதற்கான பணிகளை முதலமைச்சர் விஜய் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: CM விஜய்யின் தீபாவளி பரிசு! இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போகும் தமிழக அரசு... எதிர்பார்பில் மக்கள்..!!!
தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
தகுதியான பெண்கள் விடுபடாமல் திட்டம் சீரமைப்பு
தற்போது நடைமுறையில் உள்ள ரூ.1,000 உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுடைய பல பெண்கள் பயனாளிகள் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பதும், நிர்வாக ரீதியாக சில குளறுபடிகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்தக் குறைகளைச் சரிசெய்து, தகுதியான அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கிடைக்கும் வகையில் திட்டத்தைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார். இதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், உயர்த்தப்பட்ட ரூ.2,500 தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை ரூ. 2500 இல் அதிரடி மாற்றம்..! தீவிரமாக நடக்கும் வேலை... அமைச்சர் ஜெகதீஸ்வரி வெளியிட்ட முக்கிய தகவல்..!!!