×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என் மகள் உயிரோடதான் இருக்காள்..! முழு நம்பிகையுடன் கதறி அழுத காத்திருக்கும் தாய்... செஞ்சி சிறுமி வழக்கில் நெஞ்சை உருக்கும் தருணம்..!!!

விழுப்புரம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி 20 நாட்களுக்கு மேலாகியும் துப்பு கிடைக்கவில்லை. சிபிசிஐடி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மகளைத் தேடி தாய் கண்ணீருடன் காத்திருக்கிறார்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி ஹேமலதா மாயமான வழக்கில்,20 நாட்களைக் கடந்தும் இதுவரை எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. உள்ளூர் போலீசாரின் விசாரணைக்குப் பிறகு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. ஒருபுறம் அதிகாரிகள் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், மறுபுறம் மகள் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையுடன் அவரது தாய் பவானி காத்திருக்கிறார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பிறகு மாயமான சிறுமி

செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் மகள் ஹேமலதா. கடந்த அக்டோபர் 11-ம் தேதி இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி, பின்னர் தாய் மற்றும் பாட்டியுடன் வீட்டில் படுத்து உறங்கியுள்ளார். ஆனால், மறுநாள் அதிகாலையில் பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை.

இதையும் படிங்க: 20 நாட்கள் ஆகிட்டு... செஞ்சி சிறுமி மயமான இரவில் விடிய விடிய எரிந்த செங்கல் சூளை! நடந்தது என்ன..? சிக்கிய 600 செல்போன் எண்கள்! விசாரணையில் ரூட்டை மாற்றிய சி.பி.சி.ஐ.டி..!!!

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். உள்ளூர் போலீசார் சுமார் 10 நாட்கள் தேடியும் சிறுமி குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது டிஎஸ்பிக்கள் வேல்முருகன், கீதா தலைமையிலான தனிப்படையினர் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.

பள்ளியில் முகாமிட்டு சிபிசிஐடி விசாரணை

சிறுமி படித்த அரசுப் பள்ளியில் அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பழைய குற்றவாளிகளின் பின்னணி, செல்போன் உரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆய்வு செய்து வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்த விதம், வீட்டின் கதவு திறந்திருந்ததாகக் கூறப்படும் தகவல் உள்ளிட்ட விவரங்களையும் விசாரணையில் கவனத்தில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அதேநேரத்தில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காடுகள், கிணறுகள் உள்ளிட்ட இடங்களிலும் தேடுதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுவரை சிறுமிக்கு என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்தும் நேரடி தடயம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் விசாரணை தொடர்ந்து சவாலாகவே இருந்து வருகிறது.இந்த நிலையிலும் “என் மகள் இன்னும் உயிருடன் பத்திரமாக எங்கோ இருக்கிறாள்; அவள் கண்டிப்பாக எங்களிடம் திரும்பி வருவாள்” என்று தாய் முழுமையாக நம்பிக்கையை வைத்துள்ளார்.

மகள் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையில் தாய்

சிபிசிஐடி அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைத்துவிட்டு வெளியே வரும் பவானி, வீட்டின் அருகே உள்ள விநாயகர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருகிறார். மகள் எங்கிருந்தாலும் பத்திரமாக இருக்க வேண்டும் என்றும், விரைவில் தன்னிடம் திரும்பி வர வேண்டும் என்றும் கண்ணீருடன் வேண்டி வருகிறார். அவரது தவிப்பைப் பார்த்து கிராம மக்களும் வேதனை அடைந்துள்ளனர்.

ஹேமலதா கடத்தப்பட்டாரா, அல்லது அவர் மாயமானதற்குப் பின்னால் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சிறுமி குறித்த தகவல் விரைவில் கிடைத்து அவர் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதே குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

இதையும் படிங்க: செஞ்சி சிறுமி வழக்கில் சிக்கிய 600 போன் எண்கள்..! சிபிசிஐடியின் நள்ளிரவு டிஜிட்டல் பிளான்... உரையாடல்கள் கண்காணிப்பு...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஹேமலதா மாயம் #செஞ்சி சிறுமி #CBCID Investigation #Villupuram Missing Girl #பவானி தாய்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story