20 நாட்கள் ஆகிட்டு... செஞ்சி சிறுமி மயமான இரவில் விடிய விடிய எரிந்த செங்கல் சூளை! நடந்தது என்ன..? சிக்கிய 600 செல்போன் எண்கள்! விசாரணையில் ரூட்டை மாற்றிய சி.பி.சி.ஐ.டி..!!!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமியைத் தேடி 600 செல்போன் எண்களின் அழைப்பு விவரங்களை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். செங்கல் சூளை உரிமையாளர் உள்ளிட்ட 5 பேரிடமும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் மாயமான 7 வயது சிறுமியைத் தேடும் பணி 20 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இதுவரை சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால், சிபிசிஐடி போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்தப் பகுதியில் பதிவான 600 செல்போன் எண்களின் அழைப்பு விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
3 செல்போன் கோபுரங்களின் தரவுகள் சேகரிப்பு
கூலித் தொழிலாளர்களான வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் கடந்த அக்டோபர் 12-ம் தேதி மாயமானார். சிறுமியைத் தேடி மோப்ப நாய்கள், டிரோன் கேமராக்கள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியும் போலீசாருக்கு எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இதையடுத்து வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: செஞ்சி சிறுமி வழக்கில் சிக்கிய 600 போன் எண்கள்..! சிபிசிஐடியின் நள்ளிரவு டிஜிட்டல் பிளான்... உரையாடல்கள் கண்காணிப்பு...!!!
தற்போது சிறுமி காணாமல் போன ஆலம்பூண்டி பகுதியில் செயல்பாட்டில் இருந்த 3 செல்போன் கோபுரங்களின் தரவுகளை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அக்டோபர் 11-ம் தேதி இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை அந்தப் பகுதியில் பதிவான 600 செல்போன் எண்களின் விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்தவர்கள் யார், அவர்களின் நடமாட்டம் என்ன என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.
பெற்றோர், உறவினர்களிடமும் விசாரணை
இதற்கிடையே, சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், கோவில் பூசாரி மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த சில குற்றப் பின்னணி கொண்ட நபர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பல்வேறு கோணங்களில் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.
செங்கல் சூளை உரிமையாளர் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை
விசாரணையில், சிறுமி மாயமான அன்று இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை அப்பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளை தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்தச் செங்கல் சூளையின் உரிமையாளர் மற்றும் அங்கு பணியாற்றியவர்கள் என மொத்தம் 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி மாயமாகி 20 நாட்களுக்கும் மேலாகியும் எந்தத் தடயமும் கிடைக்காத நிலையில், செல்போன் தரவுகள் மற்றும் செங்கல் சூளை தொடர்பான விசாரணை மூலம் முக்கியத் தகவல் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிறுமியை மீட்கும் முயற்சியில் சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.