×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கடவுளே..! காதணி விழா முடிந்து ஊர் திரும்பியபோது கடுப்பாட்டை இழந்து வேப்ப மரத்தில் மோதிய ஆம்னி வேன்! 8 பேர் துடிதுடித்து பலி... திருச்சி அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!

திருச்சி மாவட்டம் துறையூர் முசிறி சாலையில் வேப்பமரத்தில் ஆம்னி வேன் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். ஜெம்புநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

திருச்சி மாவட்டம் துறையூர் - முசிறி சாலையில் ஆம்னி வேன் வேப்பமரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிய தொழிலாளர்கள் பயணித்த வேன், ஜெம்புநாதபுரம் அருகே கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.

கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய வேன்

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளர்கள், நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியில் நடைபெற்ற காதணி விழாவில் பங்கேற்பதற்காக ஆம்னி வேனில் சென்றனர். விழா முடிந்து மீண்டும் தங்களது ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: இன்றுடன் 42 நாட்கள் ஆகிட்டு! நாளுக்கு நாள் மரண போராட்டம்..! நேரில் என் மகளைக் கொடுக்க தயங்கினால்... கோயிலிலாவது விட்டுச் செல்லுங்கள்! செஞ்சி சிறுமியின் தாய் கண்ணீருடன் கதறல்..!!,

அப்போது, திருச்சி மாவட்டம் துறையூர் - முசிறி சாலையில் ஜெம்புநாதபுரம் அருகே சென்றபோது, வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், சாலையோரம் இருந்த வேப்பமரத்தில் அதிவேகமாக மோதியதில் வேனில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மருத்துவமனையில் மேலும் 3 பேர் உயிரிழப்பு

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

விபத்து குறித்து ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேன் கட்டுப்பாட்டை இழந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: செஞ்சி சிறுமி மாயம் வழக்கில்.. மஞ்சுளா முதல் பெங்களூர் வரை லிங்க்! செங்கல் சூளை சாம்பல்.. அடுத்து ரவுடி ராஜதுரையை சுற்றி வளைத்த சிபிசிஐடி! விசாரணையில் அடுத்தடுத்த திருப்பம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#முசிறி விபத்து #Trichy Road Accident #8 பேர் உயிரிழப்பு #ஜெம்புநாதபுரம் #ஆம்னி வேன் விபத்து
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story