×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உல்லாசத்துக்கு நான்., வாழ்க்கைக்கு இன்னொருத்தியா? சித்தியுடன் கள்ளக்காதலை கைவிட்ட இளைஞர் கொடூர கொலை.! 

கள்ளக்காதலை கைவிட்ட வாலிபர் கொலை செய்யப்பட்டார். 

Advertisement

சித்தியுடன் கள்ளத்தொடர்பு வைத்த இளைஞர், தனது திருமணத்துக்குப்பின் உறவை முறித்தததால் கொல்லப்பட்டார். 

திருமணம்: 

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒய்.எஸ்.ஆர் காலனியில் வசித்து வருபவர் அஸ்லாம் கான் (வயது 28). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இவரின் தாய் இறந்துவிட்ட காரணத்தால், அஸ்லாமின் தந்தை அன்வாரி பேகம் (வயது 41) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்தார். தம்பதிகளுக்கு மகள் இருக்கிறார். 

இதையும் படிங்க: பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்.. காதலன் பதறவைக்கும் செயல்.. தஞ்சாவூரில் பேரதிர்ச்சி.!

கள்ளக்காதல்: 

இதனிடையே, அஸ்லாம் கானுக்கும் - அவரின் சித்தி பேகத்திற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு திருமணம் தொடர்பாக பேசிய அஸ்லாம் கான், கள்ளத்தொடர்பை கைவிடலாம் ena பேகத்திடம் பேசி இருக்கிறார். 

பேரம் பேசப்பட்டது:  

அன்வாரி பேகம் இந்த விஷயத்துக்கு மறுப்பு தெரிவித்ததோடு, உனக்கு தேவையான பணம் தருகிறேன். நீ திருமணம் செய்ய வேண்டாம் என கூறி இருக்கிறார். ஆனால், அஸ்லாம் கான் திருமணத்தில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் பேகம் கொலை மிரட்டல் விடுத்ததைத்தொடர்ந்து, அஸ்லாம் கான் தனது மாமாவின் வீட்டில் தங்கியிருக்க தொடங்கியுள்ளார். 

கொலை: 

இந்த விஷயம் பேகத்துக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கூலிப்படை கும்பலை தொடர்பு கொண்டவர், ரூ.6 லட்சம் பேரம் பேசி கொலை சம்பவத்தை அரங்கேற்ற கூறியுள்ளார். மேலும், ரூ. 50 ஆயிரம் முன்பணமும் கொடுத்துள்ளார். இந்த விஷயத்துக்கு தனது சகோதரர் ஷேக் முகம்மதையும் ஒப்புக்கொள்ள வைத்து கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.  

சம்பவம்: 

கடந்த ஜூலை 1 ம் தேதி இவர்களின் திட்டம் தோல்வியில் முடிந்த நிலையில், கடந்த 15 ம் தேதி கூலிப்படை ஆட்கள் அஸ்லாம் கானை வெட்டிக்கொலை செய்து தப்பிச் சென்றனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்தனர். 

இதையும் படிங்க: கவனிக்க ஆட்கள் இல்லை.. பாலுக்காக கதறிய பச்சிளம் பிஞ்சு.. கொன்று புதைத்த தாய்.. திருவண்ணாமலையில் சோகம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Telangana #illegal affair
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story