×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரம்.. காதலன் பதறவைக்கும் செயல்.. தஞ்சாவூரில் பேரதிர்ச்சி.!

Thanjavur News Today: தஞ்சாவூரில் பள்ளி ஆசிரியை காவியா (26), அவரது காதலர் அஜித்குமார் (29) என்பவரால் கத்தியால் குத்திக்கொலை (Tanjore School Teacher Killed) செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

Advertisement

 

காதலனால் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சாவூரில் நடந்துள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகா, மேலகளக்குடி பகுதியில் வசித்து வருபவர் புண்ணியமூர்த்தி. இவர் முன்னாள் ஊராட்சி தலைவர் ஆவார். இவரின் மகள் காவியா (26). ஆலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இதே ஊரில் வசித்து வருபவர் கருணாநிதி. இவரின் மகன் அஜித் குமார் (வயது 29). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

காதல் பழக்கம்:

இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற நிலையில், காதல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், காவியாவின் பெற்றோருக்கு இந்த விஷயத்தில் உடன்பாடு இல்லை. இதனால் காவியாவிற்கும், அவரது மாமா மகனுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 23ம் தேதி திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது. இந்த விஷயத்தை அஜித் குமாரிடம் தெரிவிக்காமல் செல்போனில் காவியா தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

உண்மையை தாமதமாக சொன்னார்:

இதனிடையே, நேற்று முன்தினம் சுமார் 8 மணியளவில் செல்போனில் பேசிய காவியா, அஜித்குமாரிடம் உண்மையை கூறியுள்ளார். மேலும், நிச்சயம் தொடர்பான புகைப்படத்தையும் அனுப்பி வைத்துள்ளார். இதனால் அஜித் குமார் கோபத்தில் இருந்த நிலையில், நேற்று பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த காவியை பின்தொடர்ந்து சென்றுள்ளார்.

பள்ளி ஆசிரியை கொடூர கொலை: 

கொத்தட்டை பகுதியில் வாகனத்தை இடைமறித்து காதலித்த என்னையே நீ கரம்பிடிக்க வேண்டும் என அஜித் குமார் கூறி இருக்கிறார். இந்த விஷயத்துக்கு காவியா மறுக்கவே, ஆத்திரமடைந்த அஜித் சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். பின் அம்மாபேட்டை காவல் நிலையத்துக்குச் சென்று விஷயத்தை கூறி சரணடைந்தார்.

காவல்துறை விசாரணை:

இதனையடுத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அஜித் குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, "நாங்கள் இருவரும் கடந்த 13 ஆண்டுகளாக காதலித்தோம். எங்களின் காதலுக்கு காவியாவின் தந்தை எதிர்ப்பு தெரிவித்து, வேறொரு நபருக்கு திருமண ஏற்பாடுகளும் செய்துள்ளார். இது எனக்கு தெரியாது. காவியா இந்த துணையை சொல்லி, அவரை திருமணம் செய்ய தயாராக இருப்பதை என்னிடம் தெரிவித்தார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. நான் அவரது பெற்றோரிடம் பேசுகிறேன் என கூறியும் காவியா சம்மதம் தெரிவிக்கவில்லை. அதனால் கொலை செய்தேன்" என தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அஜித் குமார் சிறையில் அடைக்கப்பட்டார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thanjavur #Crime #Murder #தஞ்சாவூர் #பள்ளி ஆசிரியை #கொலை #காதல்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story