×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நகை கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து நிஷாந்த் சொல்லும் அதிர்ச்சி வாக்குமூலங்கள்! மீனாட்சி தாயாரிடம் விசாரணை நடத்த ஏற்பாடு..!!!

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்திடம் போலீசார் காவலில் விசாரித்து வருகின்றனர். கொள்ளைக்கு பயன்படுத்திய 3 இருசக்கர வாகனங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் 11 கிலோவுக்கும் அதிகமான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்திடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்ற உத்தரவின்படி ஒரு நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள அவரிடம், கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனங்கள் மற்றும் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

கொள்ளைக்கு 3 இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தியதாக வாக்குமூலம்

கடந்த 12-ஆம் தேதி அதிகாலை மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் நகைக்கடையில் 11 கிலோ 384 கிராம் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கியக் குற்றவாளியான நிஷாந்தை, மதுரை முதலாவது விரைவு நீதிமன்ற நீதிபதி ராஜபிரபு உத்தரவின்படி போலீசார் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: 3 நாட்கள் மாறுவேடத்தில் கடைக்குள் சென்ற நிஷாந்த்! 15 கிலோ தங்கம் கொள்ளை...! காதலி போட்டுகொடுத்த பிளான்.. லிஃப்ட் வழியாக உள்ளே புகுந்தல்! பொதுமக்களுக்காக போலீஸ் வெளியிட்ட அதிரவைக்கும் AI காட்சி..!!!

விசாரணையில், கொள்ளை முயற்சியின்போதும் கொள்ளை நடந்த நேரத்திலும், அதற்குப் பிறகும் மொத்தம் 3 இருசக்கர வாகனங்களை பயன்படுத்தியதாக நிஷாந்த் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 5-ஆம் தேதி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது மீனாட்சியின் தாயாருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை பயன்படுத்தியதாகவும், கொள்ளை நடந்தபோது மதுரை சர்வேயர் காலனியில் வாடகைக்கு எடுத்த வாகனத்தை பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சேலம் வரை சென்றதாக தகவல்

கொள்ளையை முடித்த பிறகு தனது ஹீரோ எக்ஸ்பிரஸ் இருசக்கர வாகனத்தில் சேலம் வரை சென்றதாகவும், அங்கு வாகனத்தை நிறுத்திவிட்டு தலைமறைவானதாகவும் நிஷாந்த் தெரிவித்துள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, கொள்ளை முயற்சியின்போது பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இருசக்கர வாகனம் தொடர்பாக மீனாட்சியின் தாயாரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். வாகனங்களைப் பெறுவதற்கு உதவியவர்கள் யாரேனும் உள்ளனரா, கொள்ளைச் சம்பவத்தில் வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணங்களிலும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இன்று மாலை 4 மணியுடன் போலீஸ் காவல் நிறைவு

நீதிமன்றம் வழங்கிய ஒரு நாள் போலீஸ் காவல் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைய உள்ளது. அதற்குள் நகைக்கடை கொள்ளை தொடர்பாக மேலும் பல தகவல்களை சேகரிக்க போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விசாரணையின் முடிவில் கொள்ளை வழக்கில் புதிய தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: ரூ.21 கோடி தனிஷ்க் கொள்ளை...! 4 நாளாக போலீஸ்சிடம் தண்ணி காட்டும் நிஷாந்த்...! காதலியின் வீட்டு கடனை அடைக்க போட்ட மாஸ்டர் பிளான்.!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#மதுரை நகைக்கடை கொள்ளை #நிஷாந்த் #Tanishq robbery #மதுரை போலீஸ் #Jewellery Robbery
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story