×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முறைதவறிய உறவில் பிறந்ததால் ஆத்திரம்.. 9 மாதமாகியும் பெயர் கூட வைக்காமல் கொன்று புதைத்த தம்பதி.!

Madurai News: 9 மாத கைக்குழந்தையை கொலை செய்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளது.

Advertisement

கள்ளத்தொடர்பில் பிறந்த குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த துயரம் நடந்துள்ளது. 

கள்ளத்தொடர்பு:

மதுரை மாவட்டத்தில் உள்ள பேரையூர், மெய்யனூத்தம்பட்டி, வி. ராமசாமிபுரம் பகுதியில் வசித்து வருபவர் பாண்டித்துரை (வயது 29). இவரின் மனைவி கலைச்செல்வி (வயது 26). தம்பதிகளுக்கு 5 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இதனிடையே, கலைச்செல்விக்கு வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 2 வயது கைக்குழந்தை பாலியல் வன்கொடுமை.. திமுக நிர்வாகி கைது.. பரபரக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!

குழந்தை பிறந்தது:

இதனால் அவருடன் தனிமையில் நெருங்கிய நிலையில், அதனால் கர்ப்பமாகி இருக்கிறார். ஒருகட்டத்தில் பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்த விஷயத்தை அறிந்திருந்தும் கலைச்செல்வியுடன் பாண்டித்துரை வாழ்ந்து வந்துள்ளார். ஆனால், குழந்தைக்கு 9 மாதமாகியும் பெயர் வைக்கவில்லை. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு சந்தேகம்:

இந்நிலையில், கடந்த மே 08ம் தேதி குழந்தை உடல்நலம் குன்றி உயிரிழந்ததாக கூறிய தம்பதி, யாருக்கும் தகவல் சொல்லாமல் வீட்டிலேயே அடக்கம் செய்துள்ளனர். குழந்தையின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக வட்டார மருத்துவர் விஸ்வநாத பிரபு, விஏஓ சங்கீதா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தண்ணீரில் மூழ்கடித்து கொலை:

இதனையடுத்து, சாப்டூர் காவல்துறையினர் தம்பதிகளிடம் விசாரணை நடத்திய நிலையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, பெண் குழந்தையை கணவர் ஏற்க மறுத்துவிட்டதால், 9 மாத கைக்குழந்தையை உயிர் பிரியும் வரையில் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்தது. 

இந்த தகவலை அறிந்த அதிகாரிகள் மருத்துவர்கள் உதவியுடன் குழந்தையின் உடலை மீட்டு தடயவியல் ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கள்ளக்காதல் உல்லாசம்.. ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த மனைவி.. வெறிச்செயலை அரங்கேற்றிய கணவன்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#madurai #Crime news #கள்ளத்தொடர்பு #குழந்தை கொலை #தம்பதி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story