×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

2 வயது கைக்குழந்தை பாலியல் வன்கொடுமை.. திமுக நிர்வாகி கைது.. பரபரக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!

ஓசூரில் 2 வயது குழந்தையின் கொலைக்கு காரணமாக இருந்த அரசியல்கட்சி நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

2 Year Old Girl Rape & Murder: 2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக ஓசூர் திமுக நிர்வாகி பெரியநாயகம் கைது செய்யப்பட்டுள்ளார். 

பிரிந்து வாழும் தம்பதிகள்:

Hosur Crime News: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டி பகுதியில் 24 வயதுடைய பெண்மணி வசித்து வருகிறார். இவர் தனது கணவரை பிரிந்து தாயின் வீட்டில் இருக்கிறார். தம்பதிகளுக்கு இரண்டரை வயதுடைய பெண் குழந்தையும் இருக்கும் நிலையில், குழந்தை தாயின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளது.

இதையும் படிங்க: டேட்டிங் ஆப் பழக்கத்தால் சோகம்.. திண்டுக்கல் டிஎஸ்பி மகன் கைது.. பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.!

குழந்தை மர்ம மரணம்:

இதனிடையே, குழந்தைக்கு கடந்த டிசம்பர் 11ம் தேதி வலிப்பு வந்ததாக கூறிய பெண்மணி, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து இருக்கின்றனர்.  

பிரேத பரிசோதனை:

இந்நிலையில், தனது குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அஞ்செட்டி காவல் நிலையத்தில் பெண்ணின் கணவர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

40 வயது நபர் கைது:

இந்த பரிசோதனையில், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பதும், அதனால் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, குழந்தையை வன்கொடுமை செய்ததாக ஜேசுராஜபுரம் கோம்பைக்காடு பகுதியில் வசித்து வரும் பெரியநாயகம் (40) என்பவர் கைது செய்யப்பட்டார்.

திமுக நிர்வாகி:

இவர் திமுக இளைஞரணி கிளைச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் நிலையில், குழந்தையின் தாயுடன் முறைதவறிய தொடர்பில் இருந்துள்ளார். இதனால் சம்பவத்தன்று பெண் வீட்டில் இல்லாத நேரத்தில் சென்றவர், அங்கிருந்த குழந்தையை வன்கொடுமை செய்திருக்கிறார். இதனால் உடல்நலம் குன்றிய குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பயங்கரம்.. 24 வயது இளைஞரின் குலைநடுங்க வைக்கும் செயல்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Krishnagiri #திமுக நிர்வாகி #பாலியல் வன்கொடுமை #குழந்தை #2 Year Old Girl Rape #Hosur
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story