×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓடும் பேருந்தில் கொடுமை.. பெண்கள் வெளியே வரவேகூடாதா? 2 முதியவர்கள் சேர்ந்து அதிர்ச்சி செயல்.!

Karaikudi News: இளம்பெண்ணை தவறான நோக்கத்தில் படம்பிடித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

ஓடும் பேருந்தில் பெண்ணை வீடியோ எடுத்த முதியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது..

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, கொத்தமங்கலம் பகுதியில் 27 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் காரைக்குடியில் செயல்பட்டு வரும் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு நேரத்தில் பணியை முடித்துவிட்டு அரசுப்பேருந்தில் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தார்.

இதையும் படிங்க: டேட்டிங் ஆப் பழக்கத்தால் சோகம்.. திண்டுக்கல் டிஎஸ்பி மகன் கைது.. பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை.!

காவல் நிலையத்தில் நின்ற பேருந்து:

அப்போது, இளம்பெண் இருக்கைக்கு பின்புறம் இருந்த இரண்டு பேர், இளம்பெண்ணை செல்போனில் வீடியோ எடுத்து இருக்கின்றனர். இணைக்கவனித்த இளம்பெண், இருவரிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஓட்டுநர் பேருந்தை பள்ளத்தூர் காவல் நிலையம் முன்பு நிறுத்தி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதிரடி கைது:

பின் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்திய நிலையில், இளம்பெண்ணை இருவரும் வீடியோ எடுத்தது உறுதியானது. இதனையடுத்து, இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் ராங்கியம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (வயது 54), அடைக்கப்பன் (வயது 58) என்பது தெரியவந்தது. விசாரணைக்குப்பின் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க: 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காவல்துறை அதிகாரி போக்ஸோவில் அதிரடி கைது.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sivagangai #Sexual Harassment #இளம்பெண் வீடியோ
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story