×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. காவல்துறை அதிகாரி போக்ஸோவில் அதிரடி கைது.!

Tenkasi News: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

காவல்துறை அதிகாரி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி, இடையன்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் விஜயகுமார் (வயது 26).கடந்த 2024ம் ஆண்டு இவர் தமிழ்நாடு காவல்துறையில் இணைந்துள்ளார். தற்போது, சென்னை ஆவடி பட்டாலியனில் காவல்துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். 

பாலியல் தொல்லை:

இதனிடையே, சமீபத்தில் விடுமுறை எடுத்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். ஊரில் 14 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வரும் நிலையில், அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இதனிடையே, சிறுமிக்கு காவல்துறை அதிகாரி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

காவல் நிலையத்தில் புகார்:

இதனால் சிறுமி அழுதுகொண்டே வீட்டுக்குச் சென்ற நிலையில், பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதிரடி கைது:

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உண்மை அம்பலமாகவே, காவல்துறை அதிகாரிகள் விஜயகுமாரின் மீது போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: பள்ளி மாணவியை வீட்டுக்கு அழைத்து பாதிரியாரின் பகீர் செயல்.. போக்ஸோவில் தூக்கிய காவல்துறை.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #Sexual Harassment #Pocso Act #காவலர் கைது
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story