பள்ளி மாணவியை வீட்டுக்கு அழைத்து பாதிரியாரின் பகீர் செயல்.. போக்ஸோவில் தூக்கிய காவல்துறை.!
Tiruppur Crime News: திருப்பூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் கைது செய்யப்பட்டார்.
அரசு உதவிபெறும் பள்ளியில் பயின்று வந்த மாணவிக்கு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியில், தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் பாதிரியாராக ராபர்ட் என்பவர் இருந்து வருகிறார். இதே தேவாலய வளாகத்தில் அரசு உதவிபெறும் பள்ளியும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளி மாணவ-மாணவியர்களில் ஒருசிலரை பாதிரியார் அவ்வப்போது தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று வீட்டு வேலை செய்ய வைப்பதாகவும் கூறப்படுகிறது.
போக்ஸோவில் கைது:
இதனிடையே, சம்பவத்தன்று பள்ளியில் 5ம் வகுப்பு பயின்று வரும் மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்ற பாதிரியார், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். வீட்டுக்குச் சென்ற சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவிநாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாதிரியாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.