×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

17 வயது மாணவி கர்ப்பம்.. காதல் வலைவீசி டியூசன் ஆசிரியையின் சகோதரர் பதறவைக்கும் செயல்.!

Virudhunagar News: 12ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய நபருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். 

Advertisement

பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கர்ப்பமான விவகாரத்தில், தலைமறைவான நபருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

டியூசன் சென்றார்:

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள கிராமத்தில் 17 வயதுடைய சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இதே பகுதியில் ஆங்கில ஆசிரியை வசித்து வரும் நிலையில், கடந்த ஓராண்டாக சிறுமி அவரிடம் டியூசன் சென்று வந்துள்ளார்.

இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு திருமண ஆசை காண்பித்து ஓட்டுநர் செய்த கொடுமை.. சங்கரன்கோவிலில் பதறவைக்கும் சம்பவம்.!

பாலியல் பலாத்காரம்:

அச்சமயம், ஆசிரியையின் சகோதரர் சதீஷ்குமாருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சதீஷ் சிறுமியின் மனதை மாற்றி காதல் வார்த்தைகள் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, 6 மாதங்களுக்கு முன்னதாக சிறுமி டியூசன் சென்றபோது, வீட்டில் ஆட்கள் இல்லை. 

அம்பலமான உண்மை:

சதீஷ் குமார் சிறுமியிடம் திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறல் செய்துள்ளார். இதனிடையே, மாணவியின் உடலில் மாற்றம் ஏற்படவே, சிறுமியின் பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது, சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 

அதிகாரிகள் விசாரணை:

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நடத்திய சோதனையில் உண்மை அம்பலமானது. இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

இதையும் படிங்க: +2 மாணவி பாலியல் வன்கொடுமை.. காதலித்து திருணம் செய்வதாக அரங்கேறிய கொடுமை.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sexual abuse #Virudhunagar #Crime news #17 வயது சிறுமி
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story