×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

+2 மாணவி பாலியல் வன்கொடுமை.. காதலித்து திருணம் செய்வதாக அரங்கேறிய கொடுமை.!

Tirunelveli News: பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

Advertisement

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்ததாக பெயிண்டர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

12ம் வகுப்பு மாணவி: 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் (வயது 28). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். திருநெல்வேலி பகுதியில் 17 வயதுடைய மாணவி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். 

இதையும் படிங்க: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. வீட்டில் உறங்கியபோது நடந்த கொடுமை.!

பாலியல் தொல்லை:

இதனிடையே, சிறுமியிடம் இளைஞர் காதலிப்பதாக கூறி இருக்கிறார். இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில், சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்றுள்ளார். சுமார் 2 நாட்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார். 

வன்கொடுமை உறுதி:

பின் வீட்டுக்கு வந்த மாணவி நடந்ததை கூறிய நிலையில், சிறுமியின் பெற்றோர் நெல்லை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது.

போக்ஸோவில் கைது:

இதனையடுத்து, பெருமாளின் மீது போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: 15 வயது சிறுமிக்கு திருமண ஆசை காண்பித்து ஓட்டுநர் செய்த கொடுமை.. சங்கரன்கோவிலில் பதறவைக்கும் சம்பவம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #sexual abuse #17 year old girl raped #திருநெல்வேலி செய்திகள் #மாணவி பலாத்காரம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story