6 வயது சிறுவன் நரபலியா? வேலூரில் பகீர் சம்பவம்.. அத்தை கைது.. ஊர்மக்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்.!
Vellore News: 6 வயது சிறுவனை கொலை செய்த அத்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
அமாவாசை நாளில் சிறுவன் கொலை செய்யப்பட்டாரா? என அதிர்ச்சி விசாரணை நடந்து வருகிறது.
தம்பதி:
வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு, மேல்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேஸ்வர் (வயது 35). இவர் திருப்பூர் பனியன் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதே நிறுவனத்தில் ஆஷா என்ற 30 வயதுடைய பெண்மணி வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், 2 மாதமாக மீண்டும் திருப்பூரில் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரும்புக்காட்டுக்குள் கழுத்தறுக்கப்பட்ட பெண் சடலம்.. தேடி அலைந்த உறவினர்களுக்கு திடுக் துயரம்.!
சிறுவன் மர்ம மரணம்:
தம்பதிகளுக்கு 6 வயதுடைய முகிலன் என்ற மகன் இருக்கிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக பேரணாம்பட்டு டி.டி. மோட்டூரில் ஆஷாவின் தாயார் விஜயாவுடன் வீட்டில் வசித்து வருகிறார். இதனிடையே, கடந்த 40 நாட்களாக மேல்பட்டியில் இருக்கும் ராஜேஷின் தாய் விஜயா, அவரின் மகள் ரேவதி வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுவன் நேற்று முன்தினம் மாலை இறந்துவிட்டதாக கூறி சடலத்துடன் அமர்ந்து சோகத்தில் இருந்துள்ளனர்.
நரபலியா?
மேலும், சிறுவனின் பாட்டி விஜயா, மகள் ரேவதி ஆகியோர் மாந்த்ரீகம் தொடர்பாக செய்து வருவதாகவும் உள்ளூர் மக்களால் கூறப்படுகிறது. சிறுவனை அவர்கள் நரபலி கொடுத்திருக்கலாம் எனவும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுவன் முகிலன் அடிபட்டு விழுந்து மரணம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில், தலை நசுங்கி உடலில் காயங்கள் இருந்ததால் உண்மையில் நடந்தது என்ன? என விசாரணை நடந்து வருகிறது.
கொலை உறுதி:
இந்நிலையில், விஜயாவின் மகள் ரேவதியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, ராஜேஷ் - ஆஷா இடையே நடைபெறும் சண்டைக்கு முகிலன் காரணம் என்பதால், சிறுவனை ரேவதி சித்ரவதை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று சிறுவனை அடித்து துன்புறுத்திய நிலையில், மயங்கி பேச்சு மூச்சின்றி விழுந்துள்ளார். பின் சிறுவன் மரணம் அடைந்த நிலையில், ஊர் மக்களை ஏமாற்ற முயற்சித்தும் தெரியவந்தது.
இதையும் படிங்க: உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 9 வயது மகள் கழுத்து நெரித்துக்கொலை.. தாயின் படுபாதக செயல்.!