உல்லாசத்துக்கு தடையாக இருந்த பச்சிளம் பிஞ்சு கொலை.. தாய் கைது.. மருத்துவ பரிசோதனையில் அம்பலமான ஷாக் உண்மை.!
ஒன்றரை வயதுடைய குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
உல்லாச வாழ்க்கைக்கு இடையூறு செய்த பச்சிளம் குழந்தையை பெண் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்:
சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல், சிறுவாச்சூர் பகுதியில் வசித்து வருபவர் திருமலை வாசுதேவன் (வயது 29). இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவரின் மனைவி லலிதா (வயது 21). தம்பதிகளுக்கு 5 வயது, ஒன்றரை வயதுடைய 2 மகன்கள் இருக்கின்றனர். தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: 2 வயது கைக்குழந்தை பாலியல் வன்கொடுமை.. திமுக நிர்வாகி கைது.. பரபரக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்.!
மருத்துவமனையில் அனுமதி:
லலிதா தற்போது ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் தாய் வீட்டில் வசிக்கிறார். இதே ஊரில் இளைஞர் வசித்து வரும் நிலையில், அவருடன் லலிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஏப்ரல் 10ம் தேதி குழந்தைக்கு வலிப்பு வந்ததாக கூறி லலிதா ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளார்.
குழந்தை கொலை உறுதி:
மருத்துவ பரிசோதனையில் குழந்தை இறந்தது உறுதி செயப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, உடற்கூறாய்வு பரிசோதனைக்குப்பின் குழந்தைக்கு பூச்சிக்கொல்லி மருந்து கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, தலைவாசல் காவல்துறையினர் லலிதாவிடம் விசாரணை நடத்தினர்.
நாடகம்:
அப்போது, கள்ளக்காதலனுடன் தணிக்கையில் இருக்க இடையூறாக இருந்த காரணத்தால், பாலில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும், உறவினர்களை நம்ப வைக்க போலியான நாடகம் ஆடியது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முறைதவறிய உறவில் பிறந்ததால் ஆத்திரம்.. 9 மாதமாகியும் பெயர் கூட வைக்காமல் கொன்று புதைத்த தம்பதி.!