×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நான் அப்பாவாகும் தகுதி இல்லை., நீ எப்படி கர்ப்பமான? 5 மாத கர்ப்பிணி கழுத்தை நெரித்துக்கொலை.. கணவன் வெறிச்செயல்.! 

Kanchipuram News: கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டான். 

Advertisement

மனைவியின் மீதான சந்தேகத்தால் கர்ப்பிணி பெண் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காதல் திருமணம்: 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பழையசி வாரம் பகுதியில் வசித்து வருபவர் சோமசுந்தரம் (வயது 28). இவர் ஊர்க்காவல் படை வீரராக வேலை பார்த்து வருகிறார். ஆனம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சோனியா (வயது 28). இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், 8 மாதங்களுக்கு முன்னதாக காதல் திருமணமும் செய்துகொண்டனர். 

இதையும் படிங்க: உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 9 வயது மகள் கழுத்து நெரித்துக்கொலை.. தாயின் படுபாதக செயல்.!

கர்ப்பம்: 

திருமணத்துக்குப்பின் இருவரும் சோமசுந்தரத்தின் வீட்டில் வசித்து வந்த நிலையில், சோனியா 5 மாத கர்ப்பமாகி இருக்கிறார். இதனிடையே, கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், சோனியா தனது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். 

கொலை: 

இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை அதிகாலை நேரத்தில் சோனியாவின் வீட்டுக்குச் சென்ற சோமசுந்தரம், "உனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் அப்பா இல்லை" என கூறி சண்டையிட்டுள்ளார். மேலும், மனைவியை கழுத்தை நெரித்துக்கொலை செய்து தப்பிச்சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சோனியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

கைது: 

பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சோமசுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, தனக்கு மனைவி மீது சந்தேகம் இருந்ததாகவும், குழந்தை பெற்றுக்கொள்ள இயலாத ஒரு மருத்துவ நிலை தனக்கு இருக்கும்போது எப்படி மனைவி கர்ப்பமானார் என்ற வாக்குவாதத்தில் அவரை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: கணவனின் மனதில் இருந்த அந்த ஒரு எண்ணம்.. கழுத்தறுத்து கொல்லப்பட்ட மனைவி.. பகீர் சம்பவம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #kanchipuram #pregnant women #Husband Wife #Affair Doubt
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story