×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செஞ்சி சிறுமி மாயம் வழக்கில் அடிக்கடி கணவன், மனைவியிடம் வந்த தகராறு! பிறந்தநாள் அன்று அவரிடம் வாங்கின 5,000 தொகை! 43 நாட்கள் கடந்து தாய் சொன்ன அந்த ஒரு வார்த்தை....!!!

செஞ்சி அருகே மாயமான 7 வயது ஹேமலதா 43 நாட்களாகியும் கிடைக்கவில்லை. சிபிசிஐடி விசாரணை நீடிக்கும் நிலையில், மகளை மீட்டுத் தர தாய் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான 7 வயது சிறுமி ஹேமலதா, 43 நாட்களாகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுமியை மீட்க சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறுதியான தடயங்கள் கிடைக்காத நிலையில், சிறுமியின் குடும்பப் பின்னணி மற்றும் பெற்றோரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மகளைப் பிரிந்து தவித்து வரும் தாய் பவானி, சிறுமியை யார் அழைத்துச் சென்றிருந்தாலும் திரும்ப ஒப்படைக்குமாறு கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இன்றுடன் 42 நாட்கள் ஆகிட்டு! நாளுக்கு நாள் மரண போராட்டம்..! நேரில் என் மகளைக் கொடுக்க தயங்கினால்... கோயிலிலாவது விட்டுச் செல்லுங்கள்! செஞ்சி சிறுமியின் தாய் கண்ணீருடன் கதறல்..!!,

குடும்பப் பிரச்சினைகள் குறித்தும் விசாரணை

ஆடு மேய்க்கும் தொழிலாளியான சிறுமியின் தந்தை வடிவேலுவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மூத்த மகளின் திருமணச் செலவுகள் தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. மேலும், சிறுமி காணாமல் போன நாளில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவுக்கு ஊரைச் சேர்ந்த ஒருவர் ரூ.5,000 கொடுத்ததும், அந்த விழாவில் வடிவேலு பங்கேற்காததும் போலீசாரின் கவனத்திற்கு வந்துள்ளது.

பெற்றோர் அளித்த வாக்குமூலங்களில் உள்ள முரண்பாடுகள், குடும்ப உறவுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இருப்பினும், இதுவரை சிறுமி குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

‘குழந்தையை மட்டும் திரும்பக் கொண்டு வந்து விடுங்கள்’

43 நாட்களாக மகளைத் தேடி வரும் தாய் பவானி, உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். “என் குழந்தையை யார் அழைத்துச் சென்றிருந்தாலும் தயவுசெய்து எங்காவது கொண்டு வந்து விட்டுவிடுங்கள். நாங்கள் யாரையும் குற்றவாளியாகப் பார்க்க மாட்டோம்; எந்தப் பிரச்சினையும் செய்ய மாட்டோம்” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

மகள் திரும்பக் கிடைத்தால் போதும் என்றும், அவரை நினைத்து சாப்பிட முடியாமல், தூக்கமின்றி தவித்து வருவதாகவும் பவானி வேதனை தெரிவித்துள்ளார். போலீசார் தங்களிடம் தெரிந்த அனைத்தையும் கேட்டுவிட்டதாகவும், எந்தத் தடயமும் கிடைக்காததால் குடும்பத்தினரிடமே தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆஞ்சநேயரை மட்டுமே நம்பி காத்திருக்கும் தாய்

மகளைக் கண்டுபிடிக்க வேறு வழி தெரியாத நிலையில், கடைசி நம்பிக்கையாக ஆஞ்சநேயரை வேண்டி வழிபட்டு வருவதாக பவானி தெரிவித்துள்ளார். அதிகாரிகளும் அரசியல் பிரமுகர்களும் வந்து ஆறுதல் கூறிச் செல்கிறார்களே தவிர, குழந்தையை மீட்டுத் தருவதற்கான நடவடிக்கைகள் குறித்து தங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் எதுவும் நடக்கவில்லை என்றும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

43 நாட்களைக் கடந்தும் ஹேமலதா எங்கு இருக்கிறார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. சிறுமியை விரைவில் கண்டுபிடித்து குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

இதையும் படிங்க: செஞ்சி சிறுமி மாயம் வழக்கில்.. மஞ்சுளா முதல் பெங்களூர் வரை லிங்க்! செங்கல் சூளை சாம்பல்.. அடுத்து ரவுடி ராஜதுரையை சுற்றி வளைத்த சிபிசிஐடி! விசாரணையில் அடுத்தடுத்த திருப்பம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஹேமலதா மாயம் #செஞ்சி சிறுமி #CBCID விசாரணை #7 வயது சிறுமி #விழுப்புரம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story