×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண் காவலருக்கு நேர்ந்த கொடூரம்.. கணவனின் பதறவைக்கும் செயல்.! பறிபோன உயிர்.! 

பெண் காவலர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குடியாத்தத்தில் நடந்துள்ளது. 

Advertisement

காவலரை குத்திக்கொன்று தற்கொலைக்கு முயன்ற கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பெண் காவலர்: 

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம், ஏர்த்தாங்கல் பகுதியில் வசித்து வருபவர் தாமரைச்செல்வி (வயது 41). இவர் குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் பெண் தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார். தாமரைச்செல்வியின் கணவர் அரவிந்தன் (வயது 45). இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். 

இதையும் படிங்க: கல்லூரி மாணவிக்கு குடும்பத்தினர் கண்முன் நேர்ந்த சோகம்.. வீடு சுத்தம் செய்யும் பணியில் விபரீதம்.! 

காதல் திருமணம்: 

பல ஆண்டுகளுக்கு முன்னதாக, உயிருக்கு உயிராக காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் என 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதனிடையே, அரவிந்தனின் குடும்பத்துக்கு சொந்தமான சொத்தை பிரிக்கும் விவகாரத்தில், தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கடந்த 2 மாதங்களாக கணவரை பிரிந்த தாமரைச்செல்வி, தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். 

புகார்: 

இதனிடையே, அரவிந்தனின் சகோதரர் மனைவி, கடந்த ஜூலை மாதத்தில் நடந்த குறைதீர்வு கூட்டத்தில் பெண் தலைமை காவலரின் மீது ஆபாசமாக பேசுவதாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, சம்பவத்தன்று தாமரைச்செல்வி சக காவலர்களுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். 

கொலை: 

அச்சமயம், மனைவியிடம் பேச வேண்டும் என அரவிந்தன் கூற, தாமரைச்செல்வி நெல்லூர்பேட்டை எரிக்கரைக்குச் சென்று பேசிக்கொண்டு இருந்தனர். அச்சமயம், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரமடைந்த அரவிந்தன் புதிதாக வாங்கிவந்த கத்தரிக்கோலால் தாமரைச்செல்வியின் கழுத்தில் சரமாரியாக குத்தி இருக்கிறார். இந்த சம்பவத்தில் அவர் நிகழ்விடத்திலேயே சரிந்து விழுந்தார். அரவிந்தனும் தனது நெஞ்சில் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். 

பதறிப்போன மக்கள்: 

அச்சமயம், அவ்வழியாக இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் காவலரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அரவிந்தனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் பெண் காவலரின் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில், அரவிந்தன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார். குடும்ப பிரச்சனையில் என்ன நடந்தது? எதற்காக பெண் காவலர் கொலை செய்யப்பட்டார் என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: குறைந்த முதலீடு, அதிக வட்டி, டபுள் லாபம்.. தேனாய் பேசி திகட்ட திகட்ட கேடி வேலை செய்த தோழிகள்.. நெல்லையில் ஷாக்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #vellore #Murder #Husband Wife
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story