×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கல்லூரி மாணவிக்கு குடும்பத்தினர் கண்முன் நேர்ந்த சோகம்.. வீடு சுத்தம் செய்யும் பணியில் விபரீதம்.! 

Tambaram News: வீடு சுத்தம் செய்யும் பணியில் நேர்ந்த விபரீதத்தால் கல்லூரி மாணவி உயிரிழந்தார். 

Advertisement

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழந்த சோகம் தாம்பரத்தில் நடந்துள்ளது. 

வீடு சுத்தம் செய்தார்: 

சென்னையில் உள்ள தாம்பரம், சேலையூர், கஸ்பாபுரம் பகுதியில் வசித்து வருபவர் யமுனா (வயது 19). இவர் அப்பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரியில் பயின்று வருகிறார். இதனிடையே, மாணவி யமுனா சம்பவத்தன்று தனது வீட்டில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார். 

இதையும் படிங்க: நொடியில் பிரிந்த உயிர்.. ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த மகன் துள்ளத்துடிக்க பலி., தந்தை படுகாயம்.! 

மின்கசிவு: 

அச்சமயம், எதிர்பாராத விதமாக வீட்டின் ஒரு பகுதியில் ஏற்பட்டு இருந்த மின்கசிவை கவனிக்காமல் பணியை தொடர்ந்துள்ளார். இதனால் அவரின் மீது மின்சாரம் பாய்ந்து இருக்கிறது. இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட மாணவி, நிகழ்விடத்திலேயே குடும்பத்தினர் கண்முன் துடிதுடிக்க உயிரிழந்தார். 

விசாரணை: 

பின் கல்லூரி மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது அங்கு மரணம் உறுதி செய்யப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: அறுவடை இயந்திரத்தில் சிக்கி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. பரிதாப மரணம்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #death #college student #Electrical Shock
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story