×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரேஷன் கடையில் திடீர் தீயில் கருகிய 20 அரிசி மூட்டைகள்! பட்டாசு வெடிச்சது தான் காரணம்ன்னு சொன்ன விற்பனையாளர்! போலீஸ் விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை! பெரிய கேடி தான் போல...!!!

சேலம் எடப்பாடி அருகே ரேஷன் கடையில் 20-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் எரிந்த தீ விபத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. விற்பனையாளர் ஹேமலதா கைது செய்யப்பட்டார்.

Advertisement

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குறும்பட்டி நாச்சியூர் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் கடந்த 18-ம் தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடையில் இருந்த 20-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. பட்டாசுகள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கடை விற்பனையாளர் ஹேமலதா கூறிய நிலையில், போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

பட்டாசுகளால் தீப்பிடித்ததாக கூறிய விற்பனையாளர்

தீபாவளி பண்டிகையின்போது விற்பனையாகாமல் மீதமிருந்த பட்டாசுகள் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து வெடித்ததாக ஹேமலதா தெரிவித்திருந்தார். இதனால் ரேஷன் கடையில் இருந்த அரிசி மூட்டைகள் தீயில் சிக்கியதாகவும் கூறப்பட்டது. ஆனால், தீ விபத்து ஏற்பட்ட விதம் குறித்து போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

இதையும் படிங்க: தங்கச்சியா..? கள்ளக்காதலனா..? பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தங்கை கண்ட அதிர்ச்சி! உண்மை வெளியில் தெரியாமல் இருக்க வீட்டில் நடந்த பயங்கரம்... 1 மாதம் கழித்து அழுகிய சடலம் மீட்பு! குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!!

விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை

இதையடுத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர். கடையில் இருந்த பொருட்கள், தீப்பிடித்த விதம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தபோது, பட்டாசு வெடித்ததால் தீ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும், அரிசி மூட்டைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி ஹேமலதாவே தீ வைத்துவிட்டு, அதை விபத்து போல் காட்ட முயன்றதும் விசாரணையில் அம்பலமானது.

ரேஷன் பொருட்களின் கையிருப்பில் ஏற்பட்டதாக கூறப்படும் முறைகேடுகளை மறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் ரேஷன் கடை தீ விபத்து தொடர்பான விசாரணை புதிய திருப்பத்தை சந்தித்தது.

விற்பனையாளர் கைது; பணியிடை நீக்கம்

அரசுப் பொருட்களை சேதப்படுத்தியதுடன், தீ விபத்து போல நாடகமாடியதாக ஹேமலதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து கூட்டுறவுச் சங்க உயர் அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டு அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஹேமலதா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரேஷன் பொருட்கள் கையிருப்பு தொடர்பான முறைகேடு குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: எஸ்.ஐ. ராஜ் உயிரிழப்பில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை! தற்கொலை இல்லை... திட்டமிட்ட கொடூர கொலை.? அம்பலமான திடுக்கிடும் உண்மை...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#எடப்பாடி ரேஷன் கடை #Salem Ration Shop Fire #ஹேமலதா கைது #அரிசி மூட்டைகள் #ரேஷன் பொருட்கள் முறைகேடு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story