எஸ்.ஐ. ராஜ் உயிரிழப்பில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை! தற்கொலை இல்லை... திட்டமிட்ட கொடூர கொலை.? அம்பலமான திடுக்கிடும் உண்மை...!!!
சென்னையில் எஸ்.ஐ. ராஜ் தற்கொலை செய்துகொண்டதாக கருதப்பட்ட வழக்கில், மனைவியே ஆண் நண்பருடன் சேர்ந்து பெட்ரோல் ஊற்றி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்.ஐ. ராஜ் மர்மமான முறையில் தீக்காயங்களுடன் உயிரிழந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முதலில் தற்கொலை என கருதப்பட்ட நிலையில், கண்காணிப்பு கேமரா காட்சிகள் அடிப்படையில் போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், மனைவியே தனது ஆண் நண்பருடன் சேர்ந்து அவரை தீவைத்து கொலை செய்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட எஸ்.ஐ. ராஜ்
நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ் (58), புதுப்பேட்டை ஆயுதப்படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். விடுமுறையில் இருந்த அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் மீட்கப்பட்டார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சிசிடிவி காட்சியால் மாறிய விசாரணை
ராஜ் போக்சோ வழக்கில் சிக்கியிருந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்திருக்கலாம் என ஆரம்பத்தில் போலீஸார் சந்தேகித்தனர். ஆனால் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, முகத்தை மூடியபடி இளைஞர் ஒருவர் அவசரமாக வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது. இதனால் போலீஸாரின் சந்தேகம் வேறு கோணத்துக்கு திரும்பியது.
மனைவியிடம் விசாரணையில் வெளிவந்த தகவல்
இதையடுத்து ராஜின் மனைவி செல்வராணியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, தனது ஆண் நண்பரான தேவாவை வீட்டுக்கு வரவழைத்து, ராஜ் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்ததாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு ஏற்பட்ட தகராறு மற்றும் நீண்ட நேரம் செல்போனில் பேசுவது தொடர்பான சந்தேகம் ஆகியவை கொலைக்கான காரணமாக இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான தேவாவை பிடிக்க தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எஸ்.ஐ. ராஜ் கொலை வழக்கில் மேலும் என்னென்ன தகவல்கள் வெளியாகும் என்பது விசாரணையின் முடிவில் தெரியவரும்.
இதையும் படிங்க: ஐயோ... அந்த 1 வயசு குழந்தை என்ன பாவம் பண்ணுச்சு! திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!!