×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ரொம்ப கெத்தா செல்வாக்கா சுத்துனான்....! அது எனக்கு பிடிக்கல... 17 ஆண்டு கழித்துப் பழிதீர்த்த கல்லூரி மாணவர்...! த.வெ.க. பிரமுகர் படுகொலையில் அதிர வைக்கும் பின்னணி.!!!

சென்னையில் தமிழக வெற்றிக் கழக பிரமுகர் கண்ணன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர் பரணி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடும்பப் பகை காரணமாக கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

சென்னையில் தமிழக வெற்றிக் கழக பிரமுகர் கண்ணன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி மாணவர் பரணி உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அடையாறைச் சேர்ந்த பரணி (20) தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 17 ஆண்டுகளாக நீடித்த குடும்பப் பகையே கொலைக்கு காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

2 மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல்

முன்னாள் அதிமுக வட்டச் செயலாளரான கண்ணன், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருந்தார். ஐடி நிறுவனங்களுக்கு கார் வாடகைக்கு விடும் தொழிலும் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு எல்லையம்மன் கோவில் தெருவில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: திமுக அதிகாரத்தை அடியோடு களையெடுக்கும் தவெக! விஜய்யின் அடுத்த மாஸ்டர் பிளான்.... கலக்கத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்...!!!

17 ஆண்டு குடும்பப் பகை: பழிவாங்கியதாக மாணவர் வாக்குமூலம்

கொலை தொடர்பாக அடையாறைச் சேர்ந்த கல்லூரி மாணவர் பரணி (20) மற்றும் அவரது நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கடந்த 2009-ம் ஆண்டு பரணியின் பெரியப்பா சிவா கொலை செய்யப்பட்ட வழக்கிலும், 2016-ம் ஆண்டு அவரது தந்தை வேலு கொலை செய்யப்பட்ட வழக்கிலும் கண்ணனுக்கு முக்கியப் பங்கு இருந்ததாக தெரியவந்துள்ளது.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு கண்ணன் நேரில் வந்து சமாதானம் பேசியதாகவும், இருந்தபோதிலும் தனது தந்தை மற்றும் பெரியப்பாவின் மரணத்துக்கு பழிவாங்கும் எண்ணத்தில் இருந்ததாகவும் பரணி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், கண்ணன் தவெகவில் இணைந்த பிறகு அப்பகுதியில் செல்வாக்குடன் வலம் வந்தது தனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகவும், அதனால் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 போலீஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

இதனிடையே, கொலையான கண்ணன் ஏற்கனவே சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கத் தவறியதாக கூறி அடையாறு துணை கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் சாஸ்திரி நகர் இன்ஸ்பெக்டர் ரோகிணி ஆகிய இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி போலீஸ் கமிஷனர் அமல் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

குடும்பப் பகையை மையமாகக் கொண்டு நடந்ததாக கூறப்படும் இந்த கொலை, கண்ணன் சமீபத்தில் தவெகவில் இணைந்திருந்த பின்னணியில் அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. இதனால் சென்னை காவல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: கள்ளகாதலியுடன் உல்லாச வாழ்க்கை.. வீடியோ லீக்.. கட்சி மீட்டிங் என அழைத்துச்சென்று தவெக நிர்வாகியின் ஷாக் செயல்.! கணவர் கண்ணீர் குமுறல்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கண்ணன் கொலை #TVK #Chennai crime #பரணி கைது #அடையாறு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story