×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திமுக அதிகாரத்தை அடியோடு களையெடுக்கும் தவெக! விஜய்யின் அடுத்த மாஸ்டர் பிளான்.... கலக்கத்தில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள்...!!!

தமிழகத்தில் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை முன்கூட்டியே கலைத்து தனி அதிகாரிகளை நியமிப்பது குறித்து தவெக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழகத்தில் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை முன்கூட்டியே கலைத்து, தனி அதிகாரிகளை நியமிப்பது குறித்து தமிழக வெற்றிக் கழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய உள்ளாட்சி அமைப்புகளில் தவெக சார்பில் கவுன்சிலர்கள் இல்லாத நிலையில், திமுகவின் ஆதிக்கம் நீடிப்பதாக கட்சி தலைமை கருதுவதாக கூறப்படுகிறது.

இதனால் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நிர்வாக ரீதியான சிக்கல்கள் இருப்பதாகவும் தவெக தரப்பில் மதிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: கள்ளகாதலியுடன் உல்லாச வாழ்க்கை.. வீடியோ லீக்.. கட்சி மீட்டிங் என அழைத்துச்சென்று தவெக நிர்வாகியின் ஷாக் செயல்.! கணவர் கண்ணீர் குமுறல்.!

உள்ளாட்சி நிர்வாகத்தில் மாற்றம் குறித்து ஆலோசனை

மாநகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளை முன்கூட்டியே கலைத்து, அவற்றின் நிர்வாகப் பொறுப்பை தனி அதிகாரிகள் வசம் ஒப்படைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் உள்ளாட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என தவெக தலைமை கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக ஆதிக்கத்தை குறைக்க திட்டமா?

தற்போதைய மாநகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் தவெக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் இல்லாததால், பல இடங்களில் திமுகவைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளின் செல்வாக்கு தொடர்வதாக கட்சி தரப்பு கருதுகிறது. இந்த நிலை அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளாட்சிகள்?

இந்த பின்னணியில், உள்ளாட்சி அமைப்புகளை கலைத்து Special Officers நியமிக்கும் நடவடிக்கை குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

 

இதையும் படிங்க: "பதவி வேண்டுமா? வாங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க" - தவெக நிர்வாகிக்கு எதிராக பெண் பகீர் புகார்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#தவெக #TVK #உள்ளாட்சி தேர்தல் #Special Officers #விஜய்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story