கள்ளகாதலியுடன் உல்லாச வாழ்க்கை.. வீடியோ லீக்.. கட்சி மீட்டிங் என அழைத்துச்சென்று தவெக நிர்வாகியின் ஷாக் செயல்.! கணவர் கண்ணீர் குமுறல்.!
Karur News: தவெக நிர்வாகியின் அந்தரங்க வீடியோ வெளியானதாக கூறப்படுகிறது.
குளித்தலை பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி ஒருவர் பெண்ணுடன் தனிமையாக இருந்த வீடியோ வெளியானதாக கூறப்படும் நிலையில், பெண்ணின் கணவர் தற்கொலைக்கு முயற்சித்து வீடியோ வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லாரி ஓட்டுநர்:
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை, கடவூர் தாலுகா, மாவத்தூர் ஊராட்சி பெருமாள் கோவில்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ராஜலிங்கம் (வயது 28). இவர் லாரி ஓட்டுநர் ஆவார். சம்பவத்தன்று வயலுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தான் தற்கொலை செய்யபோவதை வீடியோ பதிவு செய்தபடி வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: தாய்க்கு திதிகொடுக்கச் சென்று குடும்பத்தினர்.. காவேரியாற்றில் காத்திருந்த எமன்.. 3 பேருக்கு நேர்ந்த சோகம்.!
காதல் திருமணம்:
இதுகுறித்த வீடியோவில், "நான் ராஜலிங்கம். லாரி ஓட்டுநராக இருக்கிறேன். எனது மனைவி தனலட்சுமி. நாங்கள் இருவரும் உறவினர்கள். 6 ஆண்டுகளுக்கு முன்னதாக நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். பின் குடும்ப பிரச்சனை காரணமாக மனைவி கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பலமுறை சென்று சமாதானம் பேசியும் பலனில்லை. அவர் தவெக கட்சியில் கடவூர் தெற்கு ஒன்றிய மகளிரணி செயலாளராக இருந்து வருகிறார்.
கள்ளக்காதல் உறவு?
எனது மனைவிக்கும் - கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்துசாமிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் இருவரும் தனிமையில் சந்தித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடவூர் இடையப்பட்டி பகுதியில் காருக்குள் உல்லாசமாக இருந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி இருக்கிறது. எனக்கு வாழ்வதற்கு விருப்பம் இல்லை. எனது மனைவி வேறொரு நபர்தான் இருக்கும் விடியோவை பார்த்துமா நான் உயிரோட இருக்க வேண்டும்?
ஓட்டுநர் வேலை:
இன்று வரை எனது மனைவி முத்துசாமியுடன் இருக்கிறார். நான் ஓட்டுநராக இருக்கிறேன். வெளியில் என்னால் சென்று வரமுடியவில்லை. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. எனக்கு வாழ பிடிக்கவில்லை, சாப்பிட கூட மனமில்லை. கட்சி மீட்டிங் என்ற பெயரில் எனது மனைவியை அழைத்துச் சென்று கேவலப்படுத்தி விட்டுட்டான். இந்த விஷயம் குறித்து இருவரிடமும் கேட்டால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுகிறார்கள். எனது மனஉளைச்சலால் நான் தற்கொலை செய்கிறேன். எனது குடும்பத்துக்கு எந்த அசம்பாவிதம் நடந்தாலும், எனக்கு என்ன நடந்தாலும் மனைவி பொறுப்பு. முத்துசாமியும் பொறுப்பு" என கூறி இருக்கிறார்.
புகார்:
வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக வீட்டுக்குச் சென்று ராஜலிங்கத்தை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின் மேல் சிகிச்சைக்காக அவர் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அதே நேரத்தில், தவெக கட்சிக்கும் - எனக்கும் சம்பந்தம் இல்லை. கணவர் தவறான குற்றசாட்டை முன்வைத்துள்ளார் என தனலட்சுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: பாட்டி கூறிய அந்த வார்த்தை.. ஆத்திரத்தில் பேத்தி அரங்கேற்றிய கொடூர சம்பவம்.. கரூரில் துயரம்.!