×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தங்கச்சியா..? கள்ளக்காதலனா..? பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த தங்கை கண்ட அதிர்ச்சி! உண்மை வெளியில் தெரியாமல் இருக்க வீட்டில் நடந்த பயங்கரம்... 1 மாதம் கழித்து அழுகிய சடலம் மீட்பு! குலை நடுங்க வைக்கும் சம்பவம்..!!!

கரூரில் திருமணத்தை மீறிய உறவை தங்கை பார்த்ததால் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு சாக்கடையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கரூர் வெங்கமேடு பகுதியில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு சாக்கடைக் கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கையை காணவில்லை என புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலை நடந்து சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

தங்கையின் பார்வையில் சிக்கிய உறவு

வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த 22 வயதான வினோதினி, தனியார் கடையில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு நெய் விற்பனை பிரதிநிதியாக வந்த 34 வயதான மோகன்ராஜுடன் அவருக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி வினோதினியின் வீட்டில் இருவரும் தனியாக இருந்தபோது, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த அவரது 17 வயது தங்கை தர்ஷினி இதை பார்த்துள்ளார்.

இதையும் படிங்க: கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண்..  காதலனின் சந்தேகத்தால் ஏற்பட்ட கொடூரம்.. திருப்பூரில் பரபரப்பு!

இதனால் அதிர்ச்சியடைந்த தர்ஷினி, நடந்ததை பெற்றோரிடம் தெரிவிக்கப் போவதாக கூறியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் மோகன்ராஜ் தர்ஷினியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அருகில் இருந்த பிரிட்ஜில் தலை மோதிய சிறுமி மயக்கமடைந்துள்ளார்.

உண்மை வெளியே தெரிந்துவிடுமோ என்ற அச்சம்

தர்ஷினி உயிரிழந்ததை தொடர்ந்து, தகவல் வெளியில் தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் வினோதினியும் மோகன்ராஜும் சேர்ந்து சிறுமியின் கழுத்தை நெரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி, இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று காமதேனு நகர் பகுதியில் உள்ள சாக்கடைக் கால்வாயில் வீசியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் மகளை காணவில்லை என தர்ஷினியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வினோதினியும் எதுவும் தெரியாதது போல் தங்கையைத் தேடுவது போல நடித்ததாக போலீசார் கூறுகின்றனர்.

செல்போன் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்

விசாரணையின் ஒரு பகுதியாக தர்ஷினியின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் செல்போன் எண்களை போலீசார் கண்காணித்தனர். அப்போது வினோதினி மற்றும் மோகன்ராஜ் இடையேயான உரையாடல்களில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மோகன்ராஜை பிடித்து விசாரித்ததில், தர்ஷினி கொலை செய்யப்பட்ட விவரம் வெளிச்சத்துக்கு வந்தது.

கொலை நடந்து சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு காமதேனு நகர் பகுதியில் உள்ள சாக்கடைக் கால்வாயில் போலீசார் தேடுதல் நடத்தினர். அப்போது அழுகிய நிலையில் தர்ஷினியின் உடல் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வினோதினி மற்றும் மோகன்ராஜிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: நள்ளிரவில் வீடு புகுந்த மர்ம நபர்கள்..! காலையில் சடலமாக கிடந்த மூதாட்டி.... பகீர் சம்பவம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கரூர் கொலை #Karur Crime #17 வயது சிறுமி #murder case #வெங்கமேடு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story